1. Home
  2. தமிழ்நாடு

பாரதிய ஜனதா கட்சிக்கு புதிய தேசிய தலைவர்..?

1

பாஜக தற்போதைய தலைவர் ஜே.பி. நட்டாவின் பதவிக்காலம் முடிவடைந்துவிட்ட நிலையில், புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பாஜக வட்டாரங்களில் இருந்து வெளியான தகவலின்படி, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், ஆந்திராவை சேர்ந்த டி. புரந்தேஸ்வரி மற்றும் தமிழகத்தை சேர்ந்த வானதி சீனிவாசன் ஆகியோரின் பெயர்கள் தலைவர் பதவிக்கான பட்டியலில் இருப்பதாக கூறப்படுகிறது. இவர்கள் மூவரில் நிர்மலா சீதாராமன் பாஜக தலைவராக நியமிக்கப்பட அதிக வாய்ப்பு இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். ஒருவேளை நிர்மலா சீதாராமன் நியமிக்கப்பட்டால், அவர் நிதியமைச்சர் பதவியில் இருந்து விலகிவிடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஆந்திராவை சேர்ந்த புரந்தேஸ்வரி பல மொழிகள் பேசக்கூடிய திறன் கொண்டவர் என்பதால், அவரது பெயரும் பட்டியலில் இடம் பிடித்துள்ளது. அதேபோல், தமிழகத்தை சேர்ந்த வானதி சீனிவாசனும் இந்தப் பதவிக்கு கவனிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. பாஜக தேசிய தலைமைக்கு ஒரு பெண் தலைவரை நியமிக்கும் யோசனையை ஆர்.எஸ்.எஸ். தான் கொடுத்ததாகவும், பெண்களுக்கு உரிய மரியாதை கொடுக்க வேண்டும் என்பதற்காகவே அடுத்த பாஜக தலைவர் ஒரு பெண்ணாக இருப்பார் என்றும் கூறப்பட்டு வருகிறது.

Trending News

Latest News

You May Like