1. Home
  2. தமிழ்நாடு

புதிய தலைமைச் செயலாளர் யார்..?ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணைய தலைவராக சிவ்தாஸ் மீனா நியமனம்..!

1

தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராக தற்போது சிவ்தாஸ் மீனா நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய தலைமைச் செயலாளராக முதல்-அமைச்சரின் தனி செயலாளர் முருகானந்தம் ஐ.ஏ.எஸ். நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

முன்னதாக தலைமைச் செயலராக இருந்த வெ.இறையன்பு ஓய்வு பெற்றதையடுத்து, தமிழகத்தின் 49-வது தலைமைச் செயலராக ஜூலை 1-ம் தேதி சிவ்தாஸ் மீனா பொறுப்பேற்றார்.

1989-ம் ஆண்டு தமிழகப் பிரிவு ஐ.ஏ.எஸ். அதிகாரியான சிவ்தாஸ் மீனா, ராஜஸ்தானைச் சேர்ந்தவர். ஜெய்ப்பூரில் உள்ள மாளவியா பிராந்திய பொறியியல் கல்லூரியில் சிவில் இன்ஜினீயரிங் படித்தவர். ஜப்பானில் சர்வதேச ஆய்வுகளில் முதுகலைப் பட்டம் பெற்றவர். 1989-ல் ஐ.ஏ.எஸ். பணியில் சேர்ந்த அவர், முதலில் காஞ்சிபுரம் உதவி கலெக்டராக பயிற்சி பெற்றார். பின்னர் கோவில்பட்டி உதவிக் கலெக்டர், வேலூர் கூடுதல் கலெக்டர், மாவட்ட கலெக்டர் என அடுத்தடுத்து பொறுப்புகளை வகித்தார். மேலும், தமிழகத்தில் ஊரக வளர்ச்சித் துறை, நில நிர்வாகத் துறை, போக்குவரத்துத் துறை என பல்வேறு துறைகளிலும் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.

Trending News

Latest News

You May Like