1. Home
  2. தமிழ்நாடு

சேப்பங்கிழங்கு யார் யார் சாப்பிடலாம் ? யார் யார் சாப்பிடக்கூடாது தெரியுமா?

1

நார்ச்சத்து அதிகமாக உள்ளதால், குடல் ஆரோக்கியத்தை இந்த கிழங்குகள் பெருக்குகின்றன.. முக்கியமாக செரிமான கோளாறை அகற்றி, குடல் புண்களையும் ஆற்றக்கூடிய தன்மை சேப்பங்கிழங்குகளுக்கு உள்ளது. பெருங்குடல் புற்றுநோய் மற்றும் அழற்சி குடல் நோய்க்கு எதிராகவும் இந்த கிழங்கு பாதுகாப்பதாக மருத்துவ ஆய்வுகள் நிரூபித்துள்ளன.

இந்த கிழங்கிலிருக்கும் வைட்டமின் A, E சத்தானது, நம்முடைய சரும நலனை காக்கிறது.. சுருக்கங்களை தொடர்ந்து வரவிடாமல் தடுக்கிறது.. சரும வியாதிகளையும், காயங்களையும் குணமாக்குகின்றன.

சேப்பங்கிழங்கிலிருக்கும் வைட்டமின் C, ஆன்டிஆக்ஸிஜென்டுகள் நிறைந்தவை. இதனால், ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களை பெருகச்செய்கின்றது.. நோய் எதிர்ப்பு சக்தியும் கிடைக்கிறது..


பீட்டா கரோட்டின் நிறைந்துள்ள சேப்பங்கிழங்கினை அடிக்கடி உணவில் எடுத்து கொள்பவர்களுக்கு கண் கோளாறுகள் வருவதில்லையாம். குழந்தைகளுக்கு, அரிப்பு, அலர்ஜி ஏற்பட்டால், அதற்கும் இந்த கிழங்கு மருந்தாகும். ஆனால், 2 வயதுக்கு பிறகே குழந்தைகளுக்கு தர வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்கள்.

சேப்பங்கிழங்கில் 85 சதவீதம் மாவுச்சத்து உள்ளது. 100 கிராம் சேப்பங்கிழங்கில் 135 கலோரிகள், புரதம் 11 கிராம் உள்ளது.. பூஞ்சைகள், பாக்டீரியாக்களுக்கு எதிராக போராடக்கூடியது.. இந்த கிழங்கு கொலஸ்ட்ரால் பிரச்சனைக்கும் தீர்வு தருகிறது. சேப்பங்கிழங்கை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால் நரம்புகள் பலம் பெறும். அதனால்தான், நரம்பு தளர்ச்சி மற்றும் ஆண்மை குறைபாடு உள்ளவர்கள், இந்த கிழங்கினை உணவில் தவிர்க்கக்கூடாது என்பார்கள்.

மண்ணிலிருந்து எடுத்ததுமே சமைக்க கூடாது. இதனால் அரிப்பு அதிகமாகலாம்.. எனவே, சேப்பங்கிழங்கை நன்றாக காயவைத்தோ அல்லது சில நாட்கள் கழித்தோ பயன்படுத்தினால் அரிப்புத்தன்மையை தவிர்க்கலாம்.. அதேபோல, புளி மற்றும் எலுமிச்சம்பழத்தை சேர்த்து சமைக்கும்போது, அரிப்புத்தன்மை குறைவாகும்.. பச்சையாக இந்த கிழங்கை சாப்பிடக்கூடாது..

ஆனால், இந்த கிழங்கை யார் யார் சாப்பிட வேண்டும்? யார் யார் சாப்பிடக்கூடாது தெரியுமா? ஜீரண கோளாறு உள்ளவர்கள், அதிக உடல் எடை உள்ளவர்கள், நரம்பு தளர்ச்சி உள்ளவர்கள், சரும பிரச்சனை உள்ளவர்கள், ரத்த ஓட்டம் சீராக இல்லாதவர்கள் கட்டாயம் சேப்பங்கிழங்கை சாப்பிட வேண்டும்.. பக்கவாதம் உள்ளவர்களும், இதயம் பலவீனமானவர்களும் இதை சாப்பிடஇல்லாதவர்கள் க்கூடாது. அல்லது மருத்துவர்களின் ஆலோசனை பெற்றே சாப்பிடுவது நல்லது.
 

Trending News

Latest News

You May Like