1. Home
  2. தமிழ்நாடு

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

1

துணை முதலமைச்சர் உதயநி திஸ்டாலின், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் விரிவாக்கம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 

சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசும்போது கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு புதியவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவித்துள்ளார். கடந்த 19 மாதங்களில் இந்த திட்டத்தில் ஒரு கோடியே 15 லட்சம் பேர் பயன்பெற்று வருவதாகவும், அவர்களுக்காக 21000 கோடி ரூபாய் நேரடியாக வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 

இந்த அறிவிப்பு மூலம் பெண்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஏனென்றால் தகுதிகள் இருந்தும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் இவ்வளவு நாட்கள் பயன்பெற முடியாமல் இருந்தனர். எப்போது இந்த திட்டம் விரிவாக்கம் செய்யப்படும் என காத்திருந்தனர். அவர்களுக்கான மகிழ்ச்சியான செய்தியை இப்போது துணை முதலமைச்சர் உதநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். 

இப்போது, இந்த திட்டத்தில் யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம், யாருடைய விண்ணப்பம் எல்லாம் நிராகரிக்கப்படாமல் ஏற்றுக் கொள்ளப்படும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். பொருளில்லா ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் விண்ணப்பிக்க முடியாது. மற்றவர்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம்.

ஏழை எளிய மற்றும் வறுமை கோட்டிற்கு கீழ் இருப்பவர்கள், 5 ஏக்கர் நன்செய், 10 ஏக்கர் புன்செய் நிலங்கள் மிகாமல் வைத்திருப்பவர்கள், எந்த அரசு பதவிகள் மற்றும் பணியிலும் இல்லாதவர்களின் குடும்பத்தினர் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம். 

ஒரே ரேஷன் கார்டைக் கொண்டு இரண்டு பேர் தனித்தனியாக கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு விண்ணப்பித்தால் கலைஞர் மகளிர் உதவித்தொகை கிடைக்காது. கள ஆய்வு மூலம் அதிகாரிகள் இதனை உறுதிப்படுத்தினால் விண்ணப்பம் நிராகரிக்கப்படும். 

ஏற்கனவே குடும்ப அட்டையில் பெயர் இருப்பவர்கள் அரசின் வேறு ஏதேனும் ஓய்வூதிய திட்டங்களில் மாதாந்திர உதவித் தொகை (Kalaingar Magalir Urimai Thogai) பெற்று வந்தால் அவர்களுக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை கிடைக்காது. வார்டு உறுப்பினர்களாக இருப்பவர்கள் இந்த திட்டத்தின் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்  

ஊராட்சி மன்ற தலைவர், கவுன்சில், ஒன்றிய குழு உறுப்பினர், தலைவர் மற்றும் மாவட்ட கவுன்சிலர், எம்பி, எம்எல்ஏ, அரசு பணியாளர்களின் குடும்பத்தினர் இந்த திட்டத்தில் விண்ணப்பிக்க கூடாது. அவர்களுக்கு இந்த உதவித் தொகை கிடைக்காது. 

ஹெச்ஐவி, பார்க்கின்சன், முதுகு தண்டுவட நோய் உள்ளிட்ட வாழ்வியலை முடக்கும் நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் சிறப்புரிமை கொடுக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் அரசின் வேறு ஏதேனும் திட்டத்தில் மாதாந்திர உதவித் தொகை பெற்று வந்தாலும் இந்த திட்டத்தில் விண்ணப்பித்தால் அவர்களின் விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்டு, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும். 

Trending News

Latest News

You May Like