1. Home
  2. தமிழ்நாடு

யாரு சாமி நீ ? உசுர கையில புடிச்சுக்கிட்டு ரயிலுக்கடியே 250 கி.மீ.தூரம் பயணித்த இளைஞர்!

1

250 கிலோ மீட்டர் தூரம் ரயிலுக்கு அடியில் மறைந்திருந்தபடியே பயணித்த இளைஞரை ரயில்வே போலீசார் கைது செய்துள்ளனர்.

மத்தியப் பிரதேசத்தில் உள்ள இட்டார்ச்சி ரயில் நிலையத்தில் இருந்து ஜபல்பூர் வரை சுமார் 250 கி.மீ தூரம் இரண்டு பெட்டிகளுக்கு இடையே சக்கர இடைவெளியில் மறைந்திருந்து பயணம் செய்தார்.

இபல்பூர் ரயில் நிலையம் அருகே கேரேஜ் மற்றும் வேகன் (சி&டபிள்யூ) துறை ஊழியர்கள் நடத்திய ரோலிங் சோதனையின் போது, ​​ரயிலின் S4 கோச்சின் கீழ் ஆபத்தான முறையில் அவர் மறைந்திருப்பதை ஊழியர்கள் கண்டறிந்தனர்.

அவரை ரயிலுக்கு அடியில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ARBIF அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அந்த நபரை கைது செய்து அவர் மீது வழக்கு பதிவு செய்தனர்.


 


 

Trending News

Latest News

You May Like