சிஎஸ்கே-க்கு விசில் போடு... அடுத்த போட்டிக்கான டிக்கெட் விலை அதிரடி குறைப்பு..!

கிரிக்கெட் விளையாட்டில் நாடு கடந்து ரசிகர்களை கொண்டது ஐபிஎல் தொடர். ஐபிஎல் போட்டிகளில் அனல் பறப்பதால் ஒவ்வொரு வருடமும் இத்தொடரை கிரிக்கெட் ரசிகர்கள் மிகுந்த ஆர்வமுடன் எதிர்பார்க்கின்றனர். இதனை பூர்த்தி செய்யும் விதமாக, ஐபிஎல் தொடரின் 17-வது சீசன் நேற்று (மார்ச்.22) சென்னையில் தொடங்கியது.டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது. பெங்களூரு அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்கள் எடுத்தது.இறுதியில் சென்னை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது
இந்த தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதின. நேற்று முன்தினம் மாலை (மார்ச்.21) சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமைப் பொறுப்பிலிருந்து மகேந்திர சிங் டோனி விலகினார். அவருக்குப் பதிலாக ருதுராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டார்.
இந்த நிலையில் மார்ச் 26-ம் தேதி சேப்பாக்கத்தில் நடைபெறும் சென்னை சூப்பர் கிங்ஸ் – குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதும் ஆட்டத்திற்கான டிக்கெட் விற்பனை நேற்று தொடங்கியது. இந்தப் போட்டிக்கான டிக்கெட் விலை குறைக்கப்பட்டுள்ளது. முதல் போட்டியில் டிக்கெட்டின் விலை ரூ,1700 லிருந்து ரூ.7500 ஆக இருந்த நிலையில், இந்த போட்டிக்கான அதிகபட்ச டிக்கெட் விலை ரூ.6000 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.