1. Home
  2. தமிழ்நாடு

இன்று எந்த ராசிக்காரர்கள் விநாயகரை எப்படி வழிபட்டால் வெற்றி, செல்வம் குவியும்?

1

திதிகளில் நான்காவது திதியாக வருவது சதுர்த்தி. இது விநாயகப் பெருமானை வழிபடுவதற்கு உரிய திதியாக கருதப்படுகிறது. அமாவாசை தொடங்கிய மறுநாளிலிருந்து நான்காவது நாள் சதுர்த்தி எனப்படும். தடைகள் விலக, வெற்றிகள் கிடைக்க, செல்வ வளம் பெருக சதுர்த்தி தினத்தில் வழிபடுவது சிறப்பு. அன்று விரதம் இருந்து விநாயகப் பெருமானை வழிபட்டால் விருப்பங்கள் நிறைவேறும் என்பது நம்பிக்கை. குறிப்பாக ஒவ்வொரு ராசிக்காரர்களும் அவரவர் ராசிக்கு ஏற்றவாறு விநாயகரை வழிபட்டால் வெற்றி, அதிர்ஷ்டம், அமைதி, பொருளாதார வளர்ச்சி, தன்னம்பிக்கை, அறிவு போன்ற பல நன்மைகளை பெறலாம். இந்த ஆண்டு மே மாத வளர்பிறை சதுர்த்தி மே 30ம் தேதி வெள்ளிக்கிழமையில் வருகிறது. மகாலட்சுமிக்குரிய வெள்ளிக்கிழமையில் விநாயகரை வழிபட்டால் அதிக பலன்கள் கிடைக்கும்.

மேஷம் :

மேஷ ராசிக்காரர்கள் "ஓம் வக்ரதுண்டாய ஹூன்" என்ற மந்திரத்தை ஜெபித்து, விநாயகருக்கு வெல்லம் லட்டுக்களை படைத்து வழிபட வேண்டும். சிவப்பு நிற பூக்களைப் படைத்து வழிபடுவது கூடுதல் பலன் தரும்.


ரிஷபம் :

ரிஷப ராசிக்காரர்கள் விநாயகரை, கணபதிக்குரிய ஏதாவது ஒரு மந்திரத்தை சொல்லி, தேங்காய் லட்டுக்களை படைத்து வழிபட வேண்டும். இதனால் அதிர்ஷ்டம், மன அமைதி ஆகியவை கிடைக்கும்.

மிதுனம் :

மிதுன ராசிக்காரர்கள் விநாயகரையும், லட்சுமி தேவியையும் சேர்த்து வணங்க வேண்டும். பச்சை நிற ஆடைகள் மற்றும் பாசிப்பருப்பு லட்டுக்களை படைத்து வழிபட்டு, பிறகு அதை மற்றவர்களுக்கு பிரசாதமாக கொடுப்பதால் நன்மைகள் அதிகரிக்கும்.

கடகம் :

கடக ராசிக்காரர்கள் விநாயகரை ஏகதந்த வடிவத்தில் வணங்க வேண்டும். மோதகம், வெண்ணெய், பாயசம் ஆகியவற்றை நிவேதனம் செய்து, வெள்ளி விநாயகர் சிலையை வழிபட வேண்டும்.

சிம்மம் :

சிம்ம ராசிக்காரர்கள் பேரீச்சம்பழம் அல்லது உலர் பேரீச்சம்பழம் கலந்த பாயசத்தை விநாயகருக்கு நைவேத்தியமாக படைத்து வழிபட வேண்டும். இதனால் சாதனைகள் படைப்பீர்கள். கனவுகள் நனவாகும். நினைத்த காரியங்கள் கைகூடும்.

கன்னி:

கன்னி ராசிக்காரர்கள் விக்னஹர்த்தா வடிவத்தில் இருக்கும் விநாயகரை வணங்க வேண்டும். பச்சை ஆப்பிள்கள், ஏலக்காய், உலர் திராட்சை அல்லது பாசிப்பருப்பு அல்லது பாசிப்பருப்பு மாவால் செய்யப்பட்ட லட்டுக்களை படைத்து வழிபடலாம். இதனால் சவால்களில் இருந்து விடுபடலாம். மனத்தெளிவு கிடைக்கும். வெற்றிகள் குவியும்.

துலாம் :

துலாம் ராசிக்காரர்கள் விநாயகருக்கு படாஷா மற்றும் லட்டுக்களை படைத்து வணங்க வேண்டும். வெளிர் கிரீம் நிற விநாயகர் சிலையை வழிபட வேண்டும். இதனால் அதிர்ஷ்டம், நேர்மறை ஆற்றல், அமைதி, செல்வ வளம் ஆகியவற்றை ஈர்க்க முடியும்.

விருச்சிகம் :

விருச்சிக ராசிக்காரர்கள் விநாயகருக்கு வெல்லம் லட்டுக்களை படைத்து வழிபட வேண்டும். சிவப்பு நிற விநாயகர் சிலையை வழிபட வேண்டும். இதனால் தடைகள் விலகும். சவால்களில் வெற்றி பெறலாம்.

தனுசு :

தனுசு ராசிக்காரர்கள் சதுர்த்தி நாள் அன்று "ஓம் கணபதியே நமஹ" என்ற மந்திரத்தை ஜெபிக்க வேண்டும். விநாயகருக்கு கடலை மாவு லட்டுக்களை படைத்து வழிபட வேண்டும். இதனால் செல்வ வளம் பெருகும். துவங்கும் காரியங்களில் சாதனை படைப்பீர்கள்.

மகரம் :

மகர ராசிக்காரர்கள் விநாயகரின் சக்தி அம்சத்தை வணங்க வேண்டும். எள் லட்டுக்களை வழங்கினால் மிகவும் சாதகமான பலன்கள் கிடைக்கும். விநாயகருடன் சனி தேவரையும் சேர்த்து வணங்கினால் வலிமை கிடைக்கும். இதனால் தடைகள் விலகும். நிலைத்தன்மை, வெற்றி ஆகியவை கிடைக்கும்.

கும்பம் :

கும்ப ராசிக்காரர்கள் விநாயகருக்கு எள் குட்டா அல்லது எள் இனிப்புகளை படைத்து வழிபடலாம். நீல நிற ஆடைகளை படைக்கலாம். இதனால் உங்களின் திறமை வெளிப்படும், முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். சனி பகவானால் ஏற்படும் பாதிப்புகள் குறையும்.

மீனம் :

மீன ராசிக்காரர்கள் விநாயகருக்கு வாழைப்பழம் மற்றும் கடலை மாவு லட்டுக்களை படைத்து வழிபட வேண்டும். தாமிரம், பித்தளை அல்லது தங்கத்தாலான விநாயகர் சிலையை வழிபடுவது கூடுதல் பலன் கிடைக்கும். இதனால் செல்வ வளம் கிடைக்கும். இதனால் உள்ளார்ந்த ஞானம் பளிச்சிடும்.

சனியின் தோஷம் விலகவும் தொடங்கும் செயல்களில் தடை தாமதங்கள் ஏற்படாமல் இருக்கவும் சதுர்த்தி தினங்களில் மாதந்தோறும் இரு முறை விநாயகர் கோவிலுக்கு சென்று வழிபட்டு வரலாம். சதுர்த்தி விரதம் மன நிம்மதியையும் உடல் நலத்தையும் சேர்த்து கொடுக்கும்.

ஏழரைச் சனி, கண்ட சனி, அஷ்டம சனி, சனி திசை அல்லது மற்றும் வேறு திசைகளில் சனி புத்தி ஜாதகத்தில் சனி நீசம் ஆகி சுப கிரக பார்வை சேர்க்கை இல்லாதவர்கள் மாதந்தோறும் வளர்பிறை தேய்பிறை சதுர்த்தி அன்று விரதம் இருந்து விநாயகரை வழிபடுவது சனியினால் ஏற்படும் இன்னல்களை பொறுத்துக் கொள்ளும் மனோ பலத்தை கொடுக்கும். எதிர்பாராத திடீர் கஷ்டங்களை எதிர்கொள்ளும் துணிச்சலும் இவர்களுக்குக் கிடைக்கும்.  

சதுர்த்தி வழிபாட்டின் பலன்கள்

சதுர்த்தி அன்று மாதம் இருமுறை விரதம் இருக்க இயலாதவர்கள் கூட விநாயகர் கோவிலுக்கு சென்று 11 முறை கோவிலை வலம் வந்து கோவில் வாசலில் இருக்கும் ஏழை எளியவர்களுக்கு இயன்ற தான தர்மத்தை செய்து வர சனியின் தோஷம் விலகும்.  

விநாயகரின் கோவிலுக்கும் போக இயலாதவர்கள் சதுர்த்தி அன்று வீட்டில் மஞ்சள் அல்லது சந்தனத்தைக் கொண்டு மூன்று விரல்களில் பிள்ளையார் பிடித்து வைத்து அதில் விபூதி குங்குமம் தொட்டு வைத்து ஒரு பூவாவது வைத்து விநாயகர் மணிமாலை, விநாயகர் அகவல் போன்ற பாடல்களைச் சொல்லி வர விநாயகரின் பரிபூரண அருள் சித்தியாகும். உடல் நலமும் மன நலமும் பெற்று செய்யும் செயல்களில் ஈடுபடும் வேலைகளில்தங்கு தடை தாமதங்கள் விக்கினங்கள் விலகி வெற்றி என்ற இலக்கினை விரைவாக அடைவர்.

Trending News

Latest News

You May Like