எந்த ராசியினர் எந்த ராசிக்கல் அணியலாம்?

மேஷம் - ராசி நாதன்: செவ்வாய் - பவளம்
ரிஷபம்- ராசி நாதன்: சுக்கிரன் - வைரம் (ஐம்பொன்)
மிதுனம் - ராசி நாதன்: புதன் - மரகதம்
கடகம் - ராசி நாதன்: சந்திரன் - முத்து (ஐம்பொன்)
சிம்மம் - ராசி நாதன்: சூரியன் - மாணிக்கம் (தங்கம் அல்லது ஐம்பொன்னில் பயன்படுத்தலாம்)
கன்னி - ராசி நாதன்: புதன் - மரகதம்
துலாம் - ராசி நாதன்: சுக்கிரன் - வைரம் (ஐம்பொன்)
விருச்சிகம் - ராசி நாதன்: செவ்வாய் - பவளம்
தனுசு - ராசி நாதன்: குரு - கனக புஸ்பராகம் (வெள்ளி தவிர்க்கவும்)
மகரம் - ராசி நாதன்: சனி- நீலக்கல் (ஐம்பொன்னில் பயன்படுத்துவது சிறப்பு)
கும்பம் - ராசி நாதன்: சனி- நீலக்கல் (ஐம்பொன்னில் பயன்படுத்துவது சிறப்பு)
மீனம் - ராசி நாதன்: குரு - கனக புஸ்பராகம்
ராசிகற்கல் பயன்படுத்துவதால் ஒருவரின் விதி மாறிவிடுமா, அதிர்ஷ்டம் கூடிவிடுமா என பலர் கேட்பதுண்டு. இந்த உலகத்தில் நாம் பிறந்ததே நமக்கான வினைகளை முடிப்பதற்காக தான். அதோடு ஜோதிடம் என்றாலே நம்பிக்கை தான். கிரங்களுக்கு பொருத்தமான ராசிக்கல் அணிந்த உடன் வாழ்க்கயில் பெரிய மாற்றம் ஏற்படாது. நம் இக்கட்டான சூழலில் கவனமாக இருந்து போராட வேண்டும். நவரத்தின கல் அணிந்த உடன் ஒரு நீசமடைந்த கிரகத்தை நமக்கு சாதகமாக மாற்றிவிட முடியாது என்ற கருத்தையும் ஜோதிடர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.