மகாளய பட்ஷத்தின் போது எந்தெந்த காய்கறிகளை சாப்பிட வேண்டும்?
அமாவாசை என்பது முன்னோர் வழிபாட்டிற்குரிய நாளாகும். அனைத்து அமாவாசை நாட்களிலும் தவறாமல் விரதம் இருந்து முன்னோர் வழிபாட்டினை மேற்கொள்ள வேண்டும் என சாஸ்திரங்கள் சொல்கின்றன. அதே சமயம் அனைத்து அமாவாசைகளிலும் விரதம் இருந்து முன்னோர்களுக்கு செலுத்த வேண்டிய பிதுர் கடன்களை நிறைவேற்ற முடியாதவர்கள் வருடத்தில் வரும் மூன்று அமாவாசைகளில் கண்டிப்பாக விரதம் இருந்து, தர்ப்பணம், சிராத்தம் போன்றவற்றை செலுத்த வேண்டும் என்றும் சொல்லப்பட்டுள்ளது.
பித்ருலோகத்தில் உள்ள நம்முடைய முன்னோர்கள் வருடத்திற்கு ஒருமுறை மட்டும் நம்மை பார்ப்பதற்காக பூலோகத்திற்கு வருவதுண்டு. அப்படி அவர்கள் பித்ருலோகத்தில் இருந்து புறப்படும் நாளை தை அமாவாசை என்றும், பூலோகத்திற்கு வந்து நம்முடன் தங்கி காலத்தை மகாளய பட்சம் என்றும், மீண்டும் அவர்கள் பித்ருலோகத்திற்கு செல்லும் நாளை ஆடி அமாவாசை என்றும் சொல்கிறோம். இந்த மூன்று அமாவாசைகளும் மிக முக்கியமான அமாவாசைகள் என்பதால் இவற்றை தவற விடாமல் கண்டிப்பாக விரதம் இருக்க வேண்டும் என சொல்லப்படுகிறது.
இவற்றை புரட்டாசி மாத பெளர்ணமிக்கு பிறகு வரும் 15 நாட்களை மகாளய பட்ச காலம் என்கிறோம். இந்த 15 நாட்களும் விரதம் இருந்து பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபடுவது சிறப்பானதாகும். அப்படி மகாளய பட்ச காலத்தில் விரதம் இருந்து தர்ப்பணம் கொடுக்க முடியாதவர்கள் மகாளய அமாவாசை தினத்தில் கண்டிப்பாக தர்ப்பணம் கொடுக்க வேண்டும். மற்ற அமாவாசைகளில் நாம் யாருடைய பெயரை சொல்லி தர்ப்பணம் கொடுக்கிறோமோ அது அவர்களை மட்டுமே போய் சேரும்.
ஆனால் மகாளய அமாவாசை அன்று நாம் கொடுக்கும் தர்ப்பணம், பெயர் தெரிந்த மற்றும் தெரியாத நம்முடைய முன்னோர்கள் அனைவரையும் சென்று சேரும். இந்த நாளில் நாம் செய்யும் வழிபாடுகளும், தான தர்மங்களும் அவர்கள் மோட்சத்தை அடைய செய்யும். அதனாலேயே மகாளய அமாவாசையை சர்வபித்ரு மோட்ச அமாவாசை என்று குறிப்பிடுகிறோம்.
அந்தணர்களை வைத்து தர்ப்பணம் கொடுக்க வசதியோ, வாய்ப்போ இல்லாதவர்கள் வீட்டிலேயே காசி, கயா தலங்களை மனதார பிரார்த்தனை செய்து கொண்டு, முன்னோர்களை யாரெல்லாம் தெரியுமோ அவர்களை மனதில் நினைத்துக் கொண்டு, காசி...காசி என்று சொல்லி வீட்டிலேயே எள்ளும் தண்ணீரும் இறைத்து வழிபட வேண்டும். பிறகு அந்த தண்ணீரை கால் படாத இடத்தில் கொட்டி விட வேண்டும். அதற்கு பிறகு சூரியனை பார்த்து வழிபட வேண்டும். அதற்கு பிறகு சென்று வீட்டின் பூஜை அறையிலும், முன்னோர்கள் படத்திற்கு முன்பும் விளக்கேற்றி வழிபட வேண்டும். முன்னோர்களை வழிபட்ட பிறகு, வழக்கமான பூஜை உள்ளிட்ட தெய்வ வழிபாட்டினை செய்ய வேண்டும்.
மகாளய பட்ஷத்தின் போது எந்தெந்த காய்கறிகளை சாப்பிட வேண்டும்? மகாளய பட்ஷத்தின் போது மென்மையான காய்கறிகளை சாப்பிடுவது தவிர்க்கப்படுகிறது என்று ஜோதிடர்கள் விளக்குகின்றார். இந்த காரணத்திற்காக, மகாளய அமாவாசையின் போது நீங்கள் இந்த 5 காய்கறிகளை சேர்க்க வேண்டும். வெண்டைக்காய், வாழைப்பழம், உருளைக்கிழங்கு, பூசணி மற்றும் முள்ளங்கி சாப்பிட வேண்டும். அவற்றை உட்கொள்வதால் முன்னோர்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள். இதிலும் எண்ணெய் குறைவாக பயன்படுத்த வேண்டும்.
பித்ரு பக்ஷத்தின் போது எந்தெந்த காய்கறிகளை சாப்பிடக்கூடாது? மகாளய பட்ஷத்தின் போது நீர் நிறைந்த காய்கறிகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அதாவது சமைக்கும் போது தண்ணீரை வெளியேற்றும் காய்கறிகளை சாப்பிடக்கூடாது. இப்படிப் பார்த்தால் சுரைக்காய், கீரைகள் போன்றவற்றைச் சாப்பிடக் கூடாது.
இது தவிர, பாகற்காய் காய்கறிகளும் தவிர்க்கப்படுகின்றன. மகாளய பட்ஷ நாட்களில் தவறுதலாகக் கூட சாதத்தைப் பயன்படுத்தக் கூடாது. சாதத்தைப் பயன்படுத்துவது முன்னோர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்துகிறது. இந்த நேரத்தில், நீங்கள் மசாலாப் பொருட்களை சாப்பிடக்கூடாது அல்லது குறைந்த அளவு சாப்பிட வேண்டும்.
மகாளய பட்ஷத்தின் போது துடைப்பத்தை ஒரு முறை மட்டுமே துடைக்க பயன்படுத்த வேண்டும். விதிகளின்படி, துடைக்க வேண்டிய அவசியம் ஏற்படும் போதெல்லாம், அதை ஒரு துணியால் சுத்தம் செய்ய வேண்டும்.