1. Home
  2. தமிழ்நாடு

ஆண்டு வருமானம் ரூ.1,00,000-க்கு மேல் உள்ள குடும்பங்களுக்கு எந்த ரேஷன் கார்டு வழங்கப்படும்?

1

ரேஷன் கார்டு என்பது அரசாங்கத்தால் வழங்கப்படும் அதிகாரப்பூர்வ ஆவணமாகும். இதன் மூலம் தனிநபர்கள் அல்லது குடும்பங்கள் அவரவருக்கு நியமிக்கப்பட்ட கடைகளில் இருந்து மானிய விலையில் அத்தியாவசிய பொருட்களை வாங்க முடியும்.

ரேஷன் கார்டு முக்கியமாக குறைந்த வருமானம் ஈட்டும் குடும்பங்களுக்கும், பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பங்களுக்கும் உதவுவதற்காக கொண்டு வரப்பட்டது. பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பங்களுக்கு அடிப்படைத் தேவைகள் மற்றும் வசதிகள் கிடைப்பதை உறுதி செய்கிறது. ஒரு குடும்பத்திற்கு கிடைக்கும் பொருட்கள் அந்த வீட்டின் வருமான நிலையைப் பொறுத்தே இருக்கும். ரேஷன் கடைகளில் தானியங்கள் சமையல் எண்ணெய், மண்ணெண்ணெய் போன்ற பொருட்கள் கிடைக்கிறது.

இந்தியாவில் ரேஷன் கார்டுகள் பல்வேறு வகைகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு பிரிவினருக்கும் அவர்களின் பொருளாதார நிலையின் அடிப்படையில் ரேஷன் கார்டுகள் வழங்கப்படுகின்றன.

அந்த்யோதயா அன்ன யோஜனா (AAY) ரேஷன் கார்டு இந்தியாவில் பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பங்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த ரேஷன் கார்டுகள் குடும்பத்தின் ஆண்டு வருமானம் 15,000 ரூபாய்க்கு கீழ் உள்ள குடும்பங்களுக்காக வழங்கப்படுகிறது. தெருவோர வியாபாரிகள், செருப்புத் தொழிலாளிகள் மற்றும் கட்டுமானத் தொழிலாளர்கள் ஆகியோர் அடங்குவர். ரேஷன் கார்டு இந்தக் குடும்பங்களுக்கு அதிக மானியத்துடன் கூடிய உணவுப் பொருட்களை அரசு வழங்குகிறது.

வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு BPL ரேஷன் கார்டுகள் வழங்கப்படுகிறது. இந்த ரேஷன் கார்டுகள் ஒரு குடும்பத்தின் ஆண்டு வருமானம் 24,200 ஆக இருக்கும் பட்சத்தில் வழங்கப்படுகிறது. இதன் மூலம் அத்தியாவசிய பொருட்களை மானிய விலையில் வாங்கிக் கொள்ளலாம்.

வறுமைக் கோட்டுக்கு மேலே உள்ள குடும்பங்களுக்கு APL ரேஷன் கார்டுகள் கிடைக்கும். ஒரு குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ. 1,00,000-க்கு மேல் உள்ள குடும்பங்களுக்கு APL ரேஷன் கார்டுகள் கிடைக்கும்.

AAY மற்றும் BPL வகைகளைப் போலன்றி, APL ரேஷன் கார்டுகள் சமூகத்தில் ஏழ்மையான பிரிவினருக்காக வடிவமைக்கப்படவில்லை. ஆனால் BPL மற்றும் AAY வகைகளின் கீழ் வராத குடும்பங்களுக்கு மானிய விலையில் உணவுப் பொருட்களை வழங்குகிறது. APL ரேஷன் கார்டு நடுத்தர வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு ஒரு பாதுகாப்பு வலையாக செயல்படுகிறது.

ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிப்பதற்கான தகுதிகள் மற்றும் ரேஷன் கார்டின் வகை வெவ்வேறு மாநிலங்களின் அடிப்படையில் மாறுபடும். 

Trending News

Latest News

You May Like