1. Home
  2. தமிழ்நாடு

மத்திய அமைச்சரவையில் எந்தெந்த அமைச்சர்களுக்கு என்ன துறை ஒதுக்கீடு..! மோடி வசம் உள்ள துறைகள் என்னென்ன..?

1

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தனி மெஜாரிட்டியை பெறாவிட்டாலும், கூட்டணிக் கட்சிகளின் தயவில் மத்தியில் பாஜக ஆட்சியமைத்துள்ளது. இதன் காரணமாக, ஐஜேடி, தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகளின் தயவில் தான் பாஜக அரியணை ஏறியுள்ளது. இதனிடையே, நேற்று முன்தினம் டெல்லியில் நடந்த பிரம்மாண்ட விழாவில் நரேந்திர மோடி 3-வது முறையாக பிரதமராக பதவியேற்றார். அவரது தலைமையில் 72 மத்திய அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர்.

இந்நிலையில், புதிய அமைச்சரவையின் முதல் கூட்டடம் பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு பிறகு யாருக்கு எந்த இலாகா என்ற தகவல் வெளியிடப்பட்டது. அதன் விவரம் வருமாறு:

  • பாதுகாப்புத் துறை - ராஜ்நாத் சிங்.
  • உள்துறை - அமித் ஷா.
  • நிதித்துறை - நிர்மலா சீதாராமன்.
  • சாலை போக்குவரத்துத் துறை - நிதின் கட்கரி.
  • வெளியுறவுத் துறை - எஸ் ஜெய்சங்கர்.
  • சுகாதாரத்துறை - ஜே.பி. நட்டா.
  • கல்வித்துறை - தர்மேந்திர பிரதான்.
  • வனத்துறை - பூபேந்தர் யாதவ்.
  • வர்த்தகம் மற்றும் தொழில்துறை - பியூஷ் கோயல்.
  • தொழிலாளர் துறை - மன்சுக் மாண்டவியா
  • பெட்ரோலியத்துறை - ஹர்தீப் சிங் பூரி.
  • விமானப் போக்குவரத்து துறை - ராம் மோகன் நாயுடு.
  • விளையாட்டுத் துறை - சிராக் பாஸ்வான்.
  • தொழிற்சாலைகள் மற்றும் எஃகு துறை - எச்.டி. குமாரசாமி.
  • வேளாண் துறை - சிவராஜ் சிங் செளஹான்.
  • சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை- ஜிதன் ராம் மாஞ்சி.
  • ரயில்வே மற்றும் தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை - அஸ்வினி வைஷ்ணவ்.

இவ்வாறு மத்திய அமைச்சர்களுக்கு இலாகாக்கள் ஒதுக்கப்பட்ட நிலையில், பிரதமர் நரேந்திர மோடி வேறு யாருக்கும் தராமல் தன்வசம் சில துறைகளை வைத்திருக்கிறார். பணியாளர்கள், பொதுமக்கள் குறைகள் மற்றும் ஓய்வூதியங்கள் துறையை மோடி தன் வசம் வைத்துள்ளார். மேலும், அணுசக்தித் துறை மற்றும் விண்வெளித்துறையையும் கடந்த முறையை போல இந்த முறையும் தன்வசம் வைத்துள்ளார் மோடி.

Trending News

Latest News

You May Like