நவம்பரில் எந்தெந்த நாட்களில் வங்கிகளுக்கு விடுமுறை? வெளியான பட்டியல் இதோ!
வங்கிகளின் வேலை நாட்கள், விடுமுறை தினம் ஆகியவற்றை முன்கூட்டியே தெரிந்துகொண்டால் தேவையற்ற அலைச்சலையும் நேர விரயத்தையும் தவிர்க்கலாம். மாநிலத்தில் உள்ளூர் திருவிழாக்கள், பண்டிகைகள் அடிப்படையில் இந்த விடுமுறை நாட்கள் வேறுபடும்.
ஒவ்வொரு மாதமும் வங்கிகளுக்கு இரண்டாம் சனிக்கிழமையும் நான்காம் சனிக்கிழமையும் விடுமுறை அளிக்கப்படுகிறது. அந்த வகையில் நவம்பர் மாதம் 9 மற்றும் 23 ஆகிய இரண்டு சனிக்கிழமைகளும் வங்கிகளுக்கு விடுமுறை. அதேபோல, ஞாயிற்று கிழமையும் வங்கிகளுக்கு விடுமுறை என்பதால் நவம்பர் 3, நவம்பர் 10, நவம்பர் 17, நவம்பர் 24 ஆகிய நான்கு நாட்களும் வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 1: வெள்ளிக்கிழமை தீபாவளி விடுமுறை
நவம்பர் 2: சனிக்கிழமை தீபாவளி (பாலி பிரதிபதா)
நவம்பர் 3: ஞாயிற்றுக்கிழமை
நவம்பர் 7: வியாழக்கிழமை சாத் பண்டிகை
நவம்பர் 8: வெள்ளிக்கிழமை சாத் பண்டிகை
நவம்பர் 9: இரண்டாவது சனிக்கிழமை
நவம்பர் 10: ஞாயிற்றுக்கிழமை
நவம்பர் 12: செவ்வாய்க்கிழமை எகாஸ்-பாக்வால்
நவம்பர் 15: வெள்ளிக்கிழமை குருநானக் ஜெயந்தி
நவம்பர் 17: ஞாயிற்றுக்கிழமை
நவம்பர் 18: திங்கட்கிழமை கனகதாச ஜெயந்தி
நவம்பர் 23: 4வது சனிக்கிழமை
நவம்பர் 24: ஞாயிற்றுக்கிழமை