1. Home
  2. தமிழ்நாடு

#LIVE : கைலாசா இருக்கும் இடத்தை இன்னும் சற்று நேரத்தில் அறிவிக்க உள்ளார் நித்யானந்தா..!

1

இந்துக்களுக்காக கைலாசா எனத் தனி நாடு உருவாக்கி இருப்பதாக அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தினார் சாமியார்  நித்தியானந்தா. இவர் மீது தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட பல மாநிலங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளன. இந்த வழக்குகளில் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். சர்வதேச போலீசார் தேடியும் இதுவரை அவர் எங்கிருக்கிறார் எனத் தெரியவில்லை. 2019-ல் வெளிநாடு தப்பிச் சென்று விட்டதாக கூறப்படும் நிலையில் அவ்வப்போது வீடியோ வெளியிட்டு பேசுவார்.

கைலாசா வர நினைப்பவர்கள் ஆஸ்திரேலியா வந்தால் அங்கிருந்து கைலாசா அழைத்து செல்லப்படுவார்கள் எனக் கூறினார். கைலாசா ஆஸ்திரேலியாவுக்கு அருகில் உள்ள தீவாக இருக்கலாம் எனக் யூகம் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இப்போது வரை அவர் எங்கிருக்கிறார், கைலாசா எங்கிருக்கிறது எனத் தெரியவில்லை. இந்நிலையில், கைலாசா எங்கிருக்கிறது என குரு பூர்ணிமா தினமான இன்று (ஞாயிற்றுக்கிழமை) அறிவிப்பேன் எனக் கூறியுள்ளார். 

வீடியோ ஒன்றை வெளியிட்ட நித்தியானந்தா இதைத் தெரிவித்துள்ளார். தன் நாட்டில் பணத்திற்கு மதிப்பு இல்லை. உணவு, கல்வி, மருத்துவம் உள்ளிட்ட அனைத்தும் இலவசம். அங்கு வந்து நிங்கள் எவ்வளவு நாள் வேண்டுமானாலும் தங்கலாம். செலவு எதுவும் இல்லை. மக்களுக்கு வரி ஏதும் இல்லை. இந்த சட்டம் மாற்றப்படாது. போலீஸ், ராணுவம் இல்லாத அகிம்சை தேசமாக கைலாசா இருக்கும்எனவும்கூறியுள்ளார். 

நீங்கள் எவ்வளவு நாள் வேண்டுமானாலும் தங்கலாம் செலவு கிடையாது என கூறியுள்ளார்.


 


 

Trending News

Latest News

You May Like