எங்கெங்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை?
பருவமழை தீவிரமடைந்திருப்பதால், நீலகிரி மாவட்டத்தில் இருந்து கூடலூர், பந்தலூர், உதகை, குந்தா ஆகிய நான்கு தாலுகாக்களில் இன்று (ஜூலை 06) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. மீதமுள்ள கோத்தகிரி, குன்னூர் ஆகிய பகுதிகளிலும் மழையின் தீவிரம் அதிகரித்ததால், அங்கும் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கனமழை தொடர்வதால் வால்பாறை தாலுக்காவில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மழை பாதிப்புகளை உடனுக்குடன் சரி செய்யும் வகையில், பேரிடர் மீட்புக் குழுவினர் நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் முகாமிட்டுள்ளனர். மண் சரிவு மற்றும் மரங்கள் விழுந்தால் உடனடியாக சரி செய்வதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
கேரளாவுக்கு அருகே இருக்கும் புதுச்சேரியின் மாஹே பகுதியிலும் மழையால் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.