“கடைய எப்ப சார் திறப்பீங்க?” 1,500 நபர்களுக்கு ₹1க்கு சட்டை என விளம்பரம் செய்த கடை உரிமையாளர்..!

தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகை என்றாலே புத்தாடை, பட்டாசுகள், இனிப்பு, பலகாரங்கள்தான் நினைவுக்கு வரும்.
இந்த நிலையில், ஈரோட்டில் உள்ள ஒரு கடை உரிமையாளர் வித்யாசமான விளம்பரத்தை அறிவித்தார். அதாவது முதலில் வரும் 1,500 நபர்களுக்கு ₹1க்கு சட்டை என விளம்பரம் செய்தார்.இந்த விளம்பரத்தை தெரிந்துகொண்ட அந்த பகுதி மக்கள் காலை முதலே அந்த கடைக்கு முன் வர தொடங்கினர்.நேரம் ஆக ஆக மக்கள் வெள்ளம் அதிகரித்துக்கொண்டே சென்றது.ஆனால் காத்திருந்தவர்களுக்கு மிஞ்சியதோ ஏமாற்றம் மட்டுமே. கடை உரிமையாளர் கடையும் திறக்கவில்லை, செல்போனையும் சுவிட்ச் ஆஃப் செய்ததால் என்ன செய்வது என்று தெரியாமல் இளைஞர்கள் குழம்பி போயினர்.
இதை அறிந்து அங்க வந்த போலீசார் காலை முதலே காத்திருந்து ஏமாற்றம் அடைந்த இளைஞர்களை அப்புறப்படுத்தினர். மேலும் முன் அனுமதி பெறாமல் சலுகைகள் அறிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என கடை உரிமையாளருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
#Watch | ஈரோடு: முதலில் வரும் 1,500 நபர்களுக்கு ₹1க்கு சட்டை என விளம்பரம் செய்துவிட்டு கடையை மூடிவிட்டு, செல்போனையும் சுவிட்ச் ஆஃப் செய்த கடை உரிமையாளர்
— Sun News (@sunnewstamil) October 5, 2024
காலை முதலே காத்திருந்து ஏமாற்றம் அடைந்த இளைஞர்களை அப்புறப்படுத்திய போலீசார், முன் அனுமதி பெறாமல் சலுகைகள் அறிவித்தால்… pic.twitter.com/iCyfuv7no4