1. Home
  2. தமிழ்நாடு

ரயில்களில் மூத்த குடிமக்களுக்கு மீண்டும் சலுகை எப்போது? பரபரக்கும் தகவல் !

ரயில்களில் மூத்த குடிமக்களுக்கு மீண்டும் சலுகை எப்போது? பரபரக்கும் தகவல் !


ரயில்களில் மூத்த குடிமக்களுக்கான கட்டண சலுகையை மீண்டும் வழங்க வேண்டுமென பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கை எழுந்துள்ளது.

கொரோனா பேரிடர் காரணமாக கடந்தாண்டு மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டன. அதன் பின்னர் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. இதில் முன்பதிவு செய்த பெட்டிகள் மட்டும் இணைக்கப்பட்டிருந்தது. முன்பதிவில்லை பெட்டிகள் நீக்கப்பட்டு மூத்த குடிமக்களுக்கான பயணக் கட்டண சலுகைகளும் நிறுத்தப்பட்டன.

ரயில்களில் மூத்த குடிமக்களுக்கு மீண்டும் சலுகை எப்போது? பரபரக்கும் தகவல் !

தற்போது ரயில் சேவைகள் ஏறக்குறைய பழைய நிலைக்கு திரும்பி விட்ட நிலையில் தங்களுக்கான கட்டண சலுகைகள் மட்டும் மீண்டும் வழங்கப்படவில்லை என மூத்த குடிமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். முதியவர்களுக்கு ரயில் பயணமே வசதியாக இருக்கும் நிலையில் கட்டண சலுகை அவசியமாகிறது என மூத்த குடிமக்கள் சங்கங்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து ரயில்வே துறைக்கு கோரிக்கை கடிதம் எழுதப்பட்டுள்ளதாகவும் அச்சகங்கள் தெரிவித்துள்ளன. இதற்கு ரயில்வே துறை விளக்கம் அளித்துள்ளது.அதன்படி மூத்த குடிமக்களுக்கான பயணக் கட்டண சலுகையை வழங்குவது குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும் என ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது. மூத்த குடிமக்களில் ஆண்களுக்கு 40 சதவிகிதமும் பெண்களுக்கு 50 சதவிகிதமும் பயணக் கட்டண சலுகை வழங்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

Trending News

Latest News

You May Like