இதற்கு தீர்வு எப்போ வருமோ ? கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த 2 தொழிலாளர்கள் உயிரிழப்பு..!

மனிதக் கழிவுகளை அகற்றும் தொழில்புரிவோர் தடுப்பு மற்றும் மறுவாழ்வு சட்டம் 2013-ன்படி கழிவுநீர் தொட்டியை இயந்திரங்களை கொண்டு மட்டுமே சுத்தம் செய்ய வேண்டும். இச்சட்டப்படி எந்த ஒரு நபரோ, உள்ளாட்சி அமைப்போ அல்லது எந்த ஒரு நிறுவனமோ நேரடியாகவோ, மறைமுகமாகவோ எந்த ஒரு பணியாளரையும் அபாயகரமான கழிவுநீர் கட்டமைப்புகள் அல்லது கழிவுநீர் தொட்டிகள் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுத்தக்கூடாது. இதை மீறுவோர் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும், பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டால், அதற்கான இயந்திரம் வாயிலாக அந்த அடைப்பை எடுக்க வேண்டும். மாறாக மனிதர்கள் இறங்கி அடைப்பை நீக்கும் பணியில் ஈடுபட்டால் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. ...
இந்நிலையில் சென்னை ஆவடி ஒன்றிய அரசின் ஓ.சி.எப் தொழிற்சாலை குடியிருப்பில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய ஈடுபடுத்தப்பட்ட இரு தொழிலாளர்கள் உயிரிழப்புமோசஸ் (45), தேவன் (46) இருவரும் உள்ளே இறங்கியதும் விஷவாயு தாக்கி உயிரிழந்துள்ளனர்
இருவரும் ஓ.சி.எப் தொழிற்சாலையில் ஒப்பந்த தூய்மை பணியாளர்களாக இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.