1. Home
  2. தமிழ்நாடு

இன்று புயல் எப்போ கரையை கடக்கும்..! எங்கெல்லாம் அதி கனமழை?

1

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் தெரிவித்துள்ளவது, அப்போது, நவம்பர் 30 பிற்பகல் காரைக்கால் - மகாபலிபுரம் இடையில் புயல் கரையை கடக்கக்கூடும். இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அடுத்த 3 நாட்களுக்கு பரவலாக மிதமான மழையும், சில இடங்களில் கன முதல் மிகக் கனமழையும் பெய்யக்கூடும்.

ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்யக்கூடும். வங்கக்கடலில் ஃபெஞ்சல் புயல் மணிக்கு 13 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. அடுத்து வரும் 24 மணி நேரத்தை பொறுத்தவரை டெல்டா மாவட்டங்கள், புதுச்சேரி, விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதி கனமழையும், திருவள்ளூர், காஞ்சிரபும், அரியலூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிகக் கனமழையும்,

திருவண்ணாமலை, திருச்சி, கள்ளக்குறிச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும். இன்று  புயல் கரையை கடக்கும் போது மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை மாவட்டங்கள்,

புதுச்சேரியில் மணிக்கு 70 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும். அவ்வப்போது 90 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மீனவர்கள் அடுத்து வரும் 2 நாட்களுக்கு கடலுக்குள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்படுகிறது. வடகிழக்கு பருவமழை தற்போது வரை ஒரு சதவீதம் அதிகமாக பெய்திருக்கிறது. புயலின் தீவிர மழைப்பொழிவை கணிப்பது கடினம். அவ்வப்போது அறிவிப்புகள் வெளியிடப்படும் என்று பாலச்சந்திரன் தெரிவித்தார்.

Trending News

Latest News

You May Like