1. Home
  2. தமிழ்நாடு

பாராளுமன்றத் தேர்தல் தேதி அறிவிப்பு - தமிழகத்தில் எப்போது?

1

2024 ஆம் ஆண்டிற்கான பாராளுமன்ற தேர்தல் தேதிகள் தேர்தல் ஆணையாளர்களால் அறிவிக்கப்பட்டது.இதன்படி இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

தமிழகத்தில் தேர்தல் ஏப்ரல் 19-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

வேட்புமனு தாக்கல் துவக்கம் - மார்ச் 20

வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் - மார்ச் 27

வேட்பு மனு மீது பரிசீலனை - மார்ச் 28

வேட்பு மனுக்களை திரும்பப்பெற கடைசி நாள் - மார்ச் 30 

7 கட்டமாக நடைபெறும் தேர்தலில்,

1 கட்டம் ஏப்ரல் 19

2 கட்டம் ஏப்ரல் 26

3 கட்டம் மே 7

4 கட்டம் மே 13

5 கட்டம் மே 20

6 கட்டம் மே 25

7 கட்டம் ஜூன் 1

வாக்கு எண்ணிக்கை ஜூன் 4-ஆம் தேதி நடைபெறுகிறது.

மொத்தமாக 26 இடைத்தேர்தல்கள் நடைபெறவுள்ளன.விளவங்கோடு இடைத்தேர்தல் வரும் ஏப்ரல் 19-ஆம் தேதி நடைபெறுகிறது.

நடப்பு தேர்தலில் நாட்டில் மொத்தமாக 96.8 கோடி வாக்காளர்கள் உள்ளனர். அதில், 1.82 கோடி பேர் முதன் முறை வாக்காளர்கள். 88.4 லட்சம் மாற்றுத்திறனாளிகள் வாக்காளர்களும் உள்ளனர். ஆண் வாக்காளர்கள் - 49.7 கோடி பேர். பெண் வாக்காளர்கள் - 47.1 கோடி பேர் உள்ளனர்.   

Trending News

Latest News

You May Like