1. Home
  2. தமிழ்நாடு

தமிழகத்தில் பள்ளிகள் எப்போது திறப்பு ? அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்...

தமிழகத்தில் பள்ளிகள் எப்போது திறப்பு ? அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்...

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கிய மார்ச் மாதம் முதலே பள்ளி , கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 10 மற்றும் 11ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு விட்டது.

தமிழகத்தில் பள்ளிகள் எப்போது திறப்பு ? அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்...

தேர்வின்றி மாணவர்கள் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, ஆகஸ்ட் 3 வது வாரத்தில் பள்ளிகள் திறக்க அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வந்தன. இந்த நிலையில் ,

தமிழகத்தில் பள்ளிக் கூடங்களை தற்போது திறப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்று நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். மேலும் , கொரோனா பரவல் சூழல் மாறிய பிறகே பள்ளிகளை திறப்பது குறித்து முடிவு செய்யப்படும் எனவும் கூறியுள்ளார்.

Newstm.in

Trending News

Latest News

You May Like