பாம்பன் பாலம் திறப்பு விழா எப்போது?
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் கடல் நடுவே ஏற்கனவே 105 ஆண்டுகள் பழமை வாய்ந்த ரயில் பாலம் இருக்கிறது. அதற்கு அருகே ரூ. 550 கோடி செலவில் புதிய பாலம் கட்டும் பணி கடந்த 4 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வந்தது. இதில் மொத்தம் 333 தூண்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது தூண்கள் அமைக்கப்பட்டு தண்டவாளம் பொருத்தும் பணி மற்றும் 40 க்கு மேற்பட்ட மின் கம்பங்கள் பொருத்தும் பணி நடந்து முடிந்துள்ளன.
அதே போல பாலத்தின் நுழைவு பகுதியில் தூக்குப்பாலத்தை வைத்து வடிவமைக்கும் பணி கடந்த 4 மாதங்களுக்கு மேல் நடந்து வருகிறது. மற்ற பணிகளையும் விரைவில் முடிக்க ரயில்வே துறை உத்தரவிட்டுள்ளது. தற்போது பணிகள் முடிந்துள்ள நிலையில் அடுத்த மாதம் பாலம் திறக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அடுத்த மாதம் பிரதமர் மோடி தமிழகம் வரும் நிலையில் அவர் கையால் புதிய பாம்பன் பாலம் திறக்கப்படும். ஆனால் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.