1. Home
  2. தமிழ்நாடு

சி.பி.எஸ்.இ. 10, 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் எப்போது?

1

சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வு கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கியது. 10ஆம் வகுப்புக்கான தேர்வு மார்ச் 13ஆம் தேதி வரையிலும், 12ஆம் வகுப்புக்கான தேர்வு ஏப்ரல் 2ஆம் தேதி வரையிலும் நடைபெற்று முடிந்தது.

லட்சக்கணக்கான மாணவர்கள் தேர்வில் பங்கேற்றனர். தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், வினாத்தாள் திருத்தும் பணி முழு வீச்சில் நடைபெற்றது.

இந்நிலையில், சி.பி.எஸ்.இ. 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் பத்தாம் தேதி போல் வெளியாகும் என கூறப்பட்டிருந்த நிலையில், தற்போது மே 20 ஆம் தேதிக்கு பிறகு வெளியாகும் என்று மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் தெரிவித்துள்ளது.

10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான தேர்வு முடிவு ஒரே நாளில் வெளியாகலாம் என மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் தெரிவித்துள்ளது.

Trending News

Latest News

You May Like