“ராகுல் பிரதமராகும் போது ஃபோனை ஒட்டுக்கேட்க முடியாது” : காங். எம்எல்ஏ காட்டம்!!

 | 

காங்கிரஸ் ஆட்சியில் ராகுல் பிரதமராகும் போது அவருடைய செல்ஃபோன் பேச்சை யாரும் ஒட்டு கேட்க முடியாது என்று காங்கிரஸ் எம்எல்ஏ ரூபி மனோகரன் காட்டமாக தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் செல்போன் ஒட்டுக்கேட்பு விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. மூத்த அரசியல் தலைவர்கள், பத்திரிகையாளர்கள், போராளிகளின் தொலைபேசி ஒட்டுக் கேட்கப்பட்டதாக வெளியான தகவல் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

அதில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் தொலைபேசியும் ஒட்டுக் கேட்கப்பட்டதாக தகவல் வெளியானது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அமளியில் ஈடுபட்டன.

ruby

இந்நிலையில் தொலை பேசி ஒட்டுக் கேட்பு விவகாரத்தை கண்டித்து நாடு முழுவதும் ஆளுநர் மாளிகைகளை முற்றுகையிடும் போராட்டத்தை காங்கிரஸ் கட்சி நடத்துகிறது.

இந்நிலையில் நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த நாங்குநேரி காங்கிரஸ் எம்எல்ஏ ரூபி மனோகரன், இந்தியாவில் காங்கிரஸ் ஆட்சி மலரும், ராகுல் காந்தி பிரதமராக பதவி ஏற்பார். அப்போது அவரது செல்ஃபோன் பேச்சை யாரும் ஒட்டு கேட்க முடியாது என்று காட்டமாக தெரிவித்தார்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP