எங்கள் ஆட்சி அமைந்ததும் காவிரி ஆறு செல்லும் வழியெங்கும் தடுப்பணைகள் கட்டப்படும் - எடப்பாடி பழனிசாமி..!
துறையூர் தொகுதி, திருச்சி சாலையில் பஸ் ஸ்டாண்ட் அருகே திரண்டு இருந்த தொண்டர்கள் மத்தியில் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி,
அதிமுக ஆட்சியின் திட்டங்களால் விவசாயிகள் நன்மை பெற்றுள்ளனர். திமுக ஆட்சியால் விவசாயிகளுக்கு எவ்வித நன்மையும் இல்லை. அதிமுக ஆட்சிக்காலத்தில் 5 ஆண்டுகளில் 2 முறை விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டது.விவசாயிகளின் பிரச்சினைகளை அனுபவ ரீதியில் உணர்ந்தவன் நான். இன்றும் என்னுடைய தொழில் விவசாயம் தான். அதிமுக ஆட்சியில் விவசாயிகளுக்கு எண்ணற்ற திட்டங்கள் கொடுத்தோம்.
மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமைந்ததும் காவிரி ஆறு செல்லும் வழியெங்கும் தடுப்பணைகள் கட்டப்படும்.அமைச்சர் ரகுபதி எட்டப்பர், அதிமுகவால் அடையாளம் காட்டப்பட்டவர். சொந்தக் கட்சிக்கு துரோகம் செய்துவிட்டுச் சென்றவர். திமுகவில் அடைக்கலம் புகுந்து அடிமை சாசனம் எழுதிக் கொடுத்துவிட்டு, அவர்கள் கொடுக்கிற செய்தியை பேசிக்கொண்டு இருக்கிறார். அமைச்சர் ரகுபதி, குவாரி உரிமையாளர்களிடம் டன்னுக்கு நூறு ரூபாய் மாமூல் வசூலிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிமுக தொண்டர்கள் ரத்தத்தை வியர்வையாக சிந்தி அவரை எம்.எல்.ஏ ஆக்கினார்கள். ஆனால், அவர் எடப்பாடி பழனிசாமி ஊழல் செய்ததாகச் சொல்கிறார். நான் நிரபராதி என்று விடுதலையாகி இங்கு நிற்கிறேன். திமுக அமைச்சர்கள், முதல்-அமைச்சர், முன்னாள் அமைச்சர்களுக்கு தில்லு திராணியிருந்தால் நீதிமன்றத்தில் வழக்கை நடத்துங்கள்.
கிட்னி விவகாரத்தில் எம்.எல்.ஏ. நக்கலாக பேசுகிறார். இப்படி நக்கலாக பேசவா ஓட்டு போட்டு மக்கள் தேர்ந்தெடுத்தார்கள்? குடும்பக் கட்சியாக உள்ளது திமுக; மக்களுக்காக பாடுபடும் கட்சி அதிமுக மட்டுமே.
இவ்வாறு அவர் கூறினார்.
.png)