குழந்தைகளுக்கான தடுப்பூசி எப்போது..?: சீரம் நிறுவனம் தகவல்..!

குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி எப்போது பயன்பாட்டுக்கு வரும் என்பது குறித்து சீரம் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ‘சீரம்’ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அதார் பூனாவாலா கூறியதாவது: “சீரம் நிறுவனம் அமெரிக்க தயாரிப்பான, ‘நோவாவாக்ஸ்’ எனும் குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசியை தயாரிக்கும் உரிமையைப் பெற்றுள்ளது.
இதை, ‘கோவாவாக்ஸ்’ என்ற பெயரில் விற்பனை செய்ய சீரம் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதற்கான பரிசோதனைகள் நடந்து வருகின்றன. அனைத்து அனுமதிகளும் பெற்ற பின்னர் கோவாவாக்ஸ் தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரும்.
அதன்படி, இன்னும் ஆறு மாதங்களுக்குள் குழந்தைகளுக்கான இந்த தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கிறோம்” என்று அதார் பூனாவாலா கூறினார்.