1. Home
  2. தமிழ்நாடு

ஆசிரியர் பணி மாறுதல் கலந்தாய்வு எப்போது..? : அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்..!

ஆசிரியர் பணி மாறுதல் கலந்தாய்வு எப்போது..? : அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்..!


திருச்சி மாவட்டம், சோமரசம்பேட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் கட்டப்பட்டுள்ள புதிய வகுப்பறை கட்டடத்தை தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்து ஆய்வு மேற்கொண்டார்.

அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ளது. வழக்கமாக மே, ஜூன் மாதங்களில் நடைபெறும் ஆசிரியர்கள் பணி மாறுதல் கலந்தாய்வை இந்த ஆண்டு நடத்த முடியவில்லை. கொரோனா பரவல் குறைந்து தளர்வுகள் அளிக்கப்பட்ட நிலையில் ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்து நிர்வாகப் பணியில் ஈடுபடலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சூழலில் முதல்வரின் ஆலோசனையைப் பெற்று விரைவில் ஆசிரியர்களின் பணி மாறுதல் கலந்தாய்வு நடத்தப்படும். அதன்பிறகு அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை இருக்கிறதா என்பதை ஆராய்ந்து அது சரி செய்யப்படும். கல்வி சேனல்களை விரிவுபடுத்துவது தொடர்பாக ஆலோசனை நடந்து வருகிறது.

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட நிலையில் கூடுதல் மதிப்பெண் தேவைப்படும் மாணவர்கள் அக்டோபரில் தேர்வு எழுதலாம். கொரோனா பரவல் கட்டுக்குள் வந்தால் மட்டுமே அப்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு இந்தத் தேர்வும் நடத்தப்படும்.

சிறப்புத் தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் கல்லூரியில் சேர்வதற்கு முதல்வரிடம் ஆலோசனை பெற்றுச் சிறப்பு ஏற்பாடு செய்யப்படும். பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்கள் நாளை (22ம் தேதி) மதிப்பெண் பட்டியலைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்” என்று தெரிவித்தார்.

Trending News

Latest News

You May Like