1. Home
  2. தமிழ்நாடு

பொங்கல் சிறப்பு தொகுப்பு விநியோகம் எப்போது? தமிழ்நாடு அரசு அறிவிப்பு

பொங்கல் சிறப்பு தொகுப்பு விநியோகம் எப்போது? தமிழ்நாடு அரசு அறிவிப்பு


தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, குடும்ப அட்டைதாரர்களுக்கு பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2022-ம் ஆண்டுக்கான பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்கும்படி முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

இந்நிலையில், ஜனவரி 3-ம் தேதி முதல் ரேஷன் கடைகளில் 20 பொருட்கள் அடங்கிய பொங்கல் சிறப்பு தொகுப்பு பொருட்கள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

திட்டத்தை ஒருங்கிணைந்து திறம்பட செயல்படுத்த அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அரசு உத்தரவிட்டுள்ளது. பொங்கல் பண்டிகையை மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாட 21 பொருட்கள் அடங்கிய சிறப்பு தொகுப்பு மக்களுக்கு வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய் போன்ற பொருட்களும், பண்டிகைக் கால சமையலுக்குத் தேவையான மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், மல்லித்தூள், கடுகு, சீரகம், மிளகு, புளி, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, ரவை, கோதுமை மாவு, உப்பு ஆகிய மளிகைப் பொருட்களும் அடங்கிய துணிப்பை (20 பொருட்கள் அடங்கிய தொகுப்பு) 2 கோடியே 15 லட்சத்து 48 ஆயிரத்து 60 குடும்பங்களுக்கு, மொத்தம் 1,088 கோடி ரூபாய் செலவில் வழங்கப்பட உள்ளது.

Trending News

Latest News

You May Like