கள்ளழகர் ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வு எப்போது??

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் மற்றும் அழகர்கோவில் கள்ளழகர் கோயில் சித்திரைத் திருவிழாக்கள் உலகப் புகழ் பெற்றவையாகும்.இந்த நிகழ்வை பார்க்க ஏராளமான மக்கள் வருகை தருவார்கள். இந்நிலையில் இந்தாண்டுக்கான மதுரை கள்ளழகர் திருவிழா வரும் ஏப்ரல் 19ம் தேதி தொடங்கவுள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்த நிகழ்ச்சிகளில் லட்சக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொள்வதால் நவீன தொழில்நுட்ப முறையில் பாதுகாப்பு பலப்படுத்தவும் ஏற்பாடு செய்ய உள்ளனர்.மேலும் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளல் நிகழ்ச்சி ஏப்ரல் 23ம் தேதி அதிகாலை 5.51 மணி முதல் 6.10 மணிக்குள்ளாக நடைபெற உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.