1. Home
  2. தமிழ்நாடு

நான் பனிரெண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது - சத்யராஜ் மகளுக்கு நடந்த பாலியல் அத்துமீறல்...!

1

‘மகிழ்மதி’ என்ற இயக்கத்தை ஆரம்பித்து அதன் மூலம் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள மக்களுக்கு ஊட்டச்சத்து மிகுந்த உணவுகளையும் கொடுத்து வருகிறார் நடிகர் சத்யராஜ் மகள் திவ்யா சத்யராஜ்.சமூகவலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருப்பவர் சிறுவயதில் தனக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை பற்றி நீண்ட பதிவு ஒன்றைப் பகிர்ந்திருக்கிறார்.

அந்தப் பதிவில், ''நான் பனிரெண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது, ஸ்டடி ஹாலிடேஸ்க்காக குன்னூர் சென்றிருந்தேன். அப்போது, மாலை 6 மணிக்கு அருகில் இருந்த பேக்கரிக்கு ஸ்நாக்ஸ் வாங்குவதற்காக சென்றிருந்தேன். அங்கு என்னுடைய தாத்தா வயதிருந்த உறவுக்காரர் ஒருவரை சந்தித்தேன். அவருடைய குடும்பம் மதிப்பு மிக்கது என்பதால் அவரை நாங்கள் மிகவும் மதித்தோம். அப்போது நான் வாங்கிய பொருட்களை பேஸ்கட்டில் எடுத்து வைத்துக் கொண்டிருந்தபோதுதான் அவர் எனது மார்பகங்களை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்ததை கவனித்தேன்.

எனக்கு அழுகையே வந்து விட்டது. எனது ஸ்வெட்டரை போட்டுக் கொண்டேன். உடனே அந்த இடத்தை விட்டு கிளம்ப நினைத்தேன். அப்போது, என் அருகில் வந்தவர் என் தோள் மீது கைவைத்து, ‘பார்க்கலாம்மா’ என்று சொல்லி கிளம்பினார். அன்று இரவு எனக்கு கெட்ட கனவாக வந்தது. இது போல உங்கள் குழந்தைகளுக்கு தகாத விஷயங்கள் நடந்தால் அதை அவர்கள் பெற்றோரிடம் நிச்சயம் சொல்ல வேண்டும். குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்’' எனக் கூறியிருக்கிறார்.

Trending News

Latest News

You May Like