1. Home
  2. தமிழ்நாடு

நான் கைது செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்ட போது எனக்கு முதல் ஆதரவு குரல் தந்தவர் இவர் தான் - நடிகை கஸ்தூரி..!

Q

திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகை கஸ்தூரி விஜயின் அரசியல் ஒரு பெரிய ஜாக்பாட். தி.மு.க.,வுக்கு எதிராக அ.தி.மு.க., தான் என்று எப்போதும் இருந்தது. தமிழகத்தில் உதயசூரியனுக்கு எதிர் இரட்டை இலைதான் என்பது 60 ஆண்டு காலமாக உள்ளது.

 

அதிலும் நடிகர் விஜய் தமது கட்சிக்கு இன்னமும் சின்னமே வாங்க வில்லை. என்ன சின்னம் வாங்க போகிறார் என்பதும் தெரியவில்லை. விஜயை முன்னிறுத்தி அ.தி.மு.க.,வின் வீச்சையும், உண்மையாக முகத்தையும் தி.மு.க.,வினர் மறைக்கிறார்கள். இது ஒரு வியாபார தந்திரம்.

 

ஒரு கட்சிக் கூட்டணிக்கு எதிராக அனைத்துக் கட்சிகளும் தனித்தனியாக போராடிக் கொண்டிருக்கின்றனர். அந்த அனைத்துக் கட்சிகளும் ஒரு குடையின் கீழ் வரவேண்டும். எல்லா மக்களும், ஏதோ ஒரு பிரச்னைக்கு ஆளும்கட்சி தான் காரணம் என்ற மனோநிலைக்கு வந்துவிட்டனர்.

சமீபத்தில் பெய்த மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் 4000 கோடி ரூபாய்க்கு நிறைவேற்றப்பட்ட பணிகள் கை கொடுக்கவில்லை. ஆனால் அடுத்த நாளே தண்ணீர் வடிந்தது. இதற்கு அவர்களின் திட்டமே காரணம் என்றால் அது இல்லை.

ரோட்டில், மூலைக்கு மூலை மோட்டார் வைத்து அனைத்து தண்ணீரையும் வெளியேற்றிவிட்டனர். பேசாமல் 4000 கோடி ரூபாய்க்கு, பம்பும், மோட்டாரும் வாங்கி கொடுத்திருக்கலாம். மக்கள் எல்லாருக்கும் இது நன்றாகவே தெரிகிறது. எல்லாரும் வெறுப்பில் உள்ளனர்.

அதையும் மீறி ஜெயிக்க வேண்டும் என்று தி.மு.க. நினைக்கிறது. அதற்காகவே விஜய், இ.பி.எஸ்., அண்ணாமலை ஆகியோரை உசுப்பேற்றி பிரித்தாளும் அரசியலை செய்கின்றனர். சீமான் இம்முறையும் தனியாக தான் தேர்தலில் நிற்பேன் என்று கூறி உள்ளார். நான் கைது செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்ட போது எனக்கு முதல் ஆதரவு குரல் தந்தவர் அவர்.

அவருக்கு நான் நன்றி கூறிவிட்டேன். அந்த நன்றியின் வெளிப்பாடாக கூறுகிறேன். மக்களின் ஒரே ஆசை தி.மு.க.,வை வெளியேற்றவேண்டும் என்பது. எல்லாரும் ஒன்று சேர்ந்து, அதை செய்துவிட்டு பின்னர் அவரவர் கொள்கையை பற்றி பேசலாம் என்று நான் சொல்வேன்.

இவ்வாறு அவர் கூறினார்

Trending News

Latest News

You May Like