50 ஆண்டுகள் கடந்து வந்த பாதைபற்றி நிருபர் எழுப்பிய கேள்விக்கு...
விசாகப்பட்டினத்திலிருந்து கூலி படப்பிடிப்பு முடித்துக் கொண்டு சென்னை திரும்பிய, நடிகர் ரஜினி விமான நிலையத்தில் நிருபர்களைச் சந்தித்தார். அப்போது, ஆன்மிகவாதியாகத் திருப்பதி லட்டு சர்ச்சைகுறித்து என்ன நினைக்கிறீர்கள் என ரஜினியிடம் நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு, ‘ஸாரி நோக்கமென்ட்ஸ்’ எனக் கூறி கருத்து கூறுவதை தவிர்த்தார் ரஜினி.
மேலும் அவர், ‘தர்பாருக்கு பிறகு போலீசாக நடித்தது வித்தியாசமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறது என்றார் ரஜினி. சினிமாவில் 50 ஆண்டுகளை எட்டியுள்ளீர்கள். உங்களை மாதிரி திரைத்துறைக்கு வர நினைக்கும் இளைஞர்களுக்கு உங்கள் அனுபவத்தில் என்ன சொல்ல நினைக்கிறீர்கள் என நிருபர் எழுப்பிய கேள்விக்கு, ‘ இது ரொம்ப பெரிய கேள்விங்க. வணக்கம், வணக்கம், நன்றி’ என நடிகர் ரஜினி பதில் அளித்தார்.