1. Home
  2. தமிழ்நாடு

இப்படி எங்களை வற்புறுத்தினால் இந்தியாவை விட்டே ‘வாட்ஸ்அப்’ சென்றுவிடும்: டெல்லியில் மெட்டா தகவல்..!

Q

வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்தும் பயனீட்டாளர்களுக்கு தனியுரிமையை மெட்டா நிறுவனம் உறுதி செய்துள்ளது.அதனால்தான் இருவருக்கு இடையே நடக்கும் உரையாடல்கள் பாதுகாப்பானதாக அமைக்கப்பட்டுள்ளன என வாட்ஸ் அப் தெரிவித்துள்ளது.
மத்திய அரசு 2021ம் ஆண்டு கொண்டுவந்த புதிய தகவல்தொழில்நுட்ப சட்டத்தில் சமூக ஊடகங்களுக்கான விதிமுறைகளை எதிர்த்து வாட்ஸ்அப் நிறுவனம் வழக்குத் தொடர்ந்துள்ளது.
மத்திய அரசு வகுத்த விதிமுறையில் வாட்ஸ்அப்பில் பரப்பப்படும் செய்தி முதலில் எங்கிருந்து, யார் மூலம் உருவாக்கப்பட்டது என்பதை தெரிவிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், இதை ஏற்க வாட்ஸ்அப் நிறுவனம் மறுத்துவிட்டது.
இந்த வழக்கின் விசாரணை நேற்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் நேற்று வந்போது, இந்தத் தகவலை வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்தது.
2021, பிப்ரவரி 25ம் தேதி, தகவல்தொழில் நுட்பச் சட்டத்தில் டிஜிட்டல் ஊடகங்களுக்கான நெறிமுறைகள், விதிகள் உருவாக்கப்பட்டன. இதன்படி, பெரியஅளவிலான பயனீட்டாளர்களைக் கொண்டுள்ள எக்ஸ்(ட்விட்டர்), ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் ஆகியவை இந்த விதிகளுக்கு உட்பட வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்தது.
ஆனால், இதற்கு வாட்ஸ்அப் நிறுவனம், தங்கள் செயலில் பயனீட்டாளர்கள் பகிர்ந்து கொள்ளும் செய்திகள், தகவல்கள் பாதுகாக்கப்பட்டவை, தனியுரிமை ரகசியம் பாதுகாக்கப்பட்டவை. இதை உடைக்க முடியாது எனக் கூறி டெல்லி உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு விதிகளுக்குஎதிராக வழக்குத் தொடர்ந்தது.
இந்த வழக்கின் விசாரணை டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி மன்மோகன், நீதிபதி மன்மீத் பிரிதம் சிங் அரோரா அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் சார்பில் வழக்கறிஞர் தேஜாஸ் கரியா ஆஜராகினார்.
அவர் வாதிடுகையில் “ வாட்ஸ்அப் தளம் என்ற வகையில் நாங்கள் என்ன கூறுகிறோம் என்றால், எங்கள் பயனீட்டாளர்களிடையிலான உரையாடல்கள் பாதுகாக்கப்பட்டவை. அந்த பாதுகாப்பை உடைத்து, உரையாடல்களை ஒட்டுக்கேட்க முயன்றால், வாட்ஸ்அப் இந்தியாவிலிருந்து வெளியேறும்.
நாங்கள் ஒரு முழுமையான சங்கிலி தொடர்பை வைத்திருக்க வேண்டும், எந்த தகவல்களையானும் உடைக்கக் கோருகிறீர்கள் என்பது எங்களுக்குத் தெரியாது. லட்சக்கணக்கான தகவல்களை பல ஆண்டுகளாக சேமிக்க வேண்டும். இதுபோன்ற கடுமையான சட்டங்கள் உலகில் எந்த நாட்டிலும் இல்லை, பிரேசிலில் கூட இல்லை எனத் தெரிவித்தார்
அதற்கு நீதிபதிகள், “ தனியுரிமை என்பது முழுமையானது அல்ல. சில இடங்களில் சமநிலைத்தன்மையை கடைபிடிக்க வேண்டும்.” எனத் தெரிவித்தனர்.
மத்திய அரசு சார்பில் ஆஜராகிய வழக்கறிஞர் கூறுகையில் “ இந்த விதி முக்கியமானது, ஏனென்றால், ஆட்பத்துக்குரிய சர்ச்சைக்குரிய தகவலக்ள் வாட்ஸ்அப் தளம் மூலம் பரப்பப்படும்போது, அது சில நேரங்களில் மதக்கலவரத்தை தூண்டுகிறது” எனத் தெரிவித்தார். இதையடுத்து, இந்த மனு மீதான விசாரணையை ஆகஸ்ட் 14ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்
2021 தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் விதிகளை எதிர்த்து கர்நாடகா, சென்னை, கொல்கத்தா, கேரளா, மும்பை நீதிமன்றங்களில் தொடரப்பட்டுள்ள பல்வேறு வழக்குகளை ஒன்றாக இணைத்து விசாரிக்கவும் நீதிமன்றம் தெரிவித்தது.

Trending News

Latest News

You May Like