1. Home
  2. தமிழ்நாடு

வாட்ஸ்அப்பில் புதிய அப்டேட் : இனி முக்கிய வாட்ஸ்அப் மெசேஜ் மிஸ் ஆகாது..!

1

 சமீப காலங்களில் நிறைய அப்டேட்ஸ் கொடுத்திருக்கிறது வாட்ஸ்அப். தற்போது  'சாட்'களை எளிதாக 'Pin' செய்து வைத்துக்கொள்ளும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

நண்பர்கள் மற்றும் உறவினர்களின் உரையாடல்கள், அலுவலக விஷயங்கள் எனப் பல முக்கியமான தகவல்கள் வாட்ஸ்அப் மூலமாகவே தற்போது பெருமளவில் நடக்கின்றன. இது எப்படி வாட்ஸ்அப்பிற்கு ப்ளஸ் ஆக இருக்கிறதோ, அதைப் போல இதுவே மைனஸ் ஆகவும் இருக்கிறது. அறிமுகம் இல்லாத, அவசியம் இல்லாத பல க்ரூப்களின் தகவல்கள், ஃபார்வர்டு மெசேஜ்கள் ஆகியவை வந்து முக்கியமான மெசேஜ்களைக் கூட கீழே தள்ளிவிடும்.

இதனால் நமக்குத் தேவையான தகவல்களைக் கூட நீண்ட தூரம் ஸ்க்ரோல் செய்தே படிக்கவோ, பார்க்கவோ முடியும். மேலும் இவற்றால் மிக முக்கியமான க்ரூப்களில் இருந்துவரும் மெசேஜ்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. அப்படி தவறவிடாமல் இருக்க உதவுவதுதான் இந்த 'Pin' ஆப்ஷன். இதன் மூலமாக தனி நபருடனான சாட் அல்லது க்ரூப் சாட் இரண்டையுமே 'Pin' செய்துவைத்துக்கொள்ள முடியும். 

நீங்கள் 'Pin' செய்து வைக்கவேண்டிய "Individual Chat' அல்லது 'Group chat' மீது சில நொடிகள் அழுத்திப் பிடித்து, மூன்று டாட் இருக்கும் பகுதியை கிளிக் செய்தால் உங்களுக்கு 'Pin' ஆப்ஷன் காட்டப்படும்.   

இதன்மூலம் உங்களுடைய முக்கியமான க்ரூப் அல்லது நபருடைய 'Chat'-களை 'Pin' செய்து வைத்துக்கொள்ள முடியும். இதனால் எவ்வளவு மெசேஜ்கள் உங்களின் வாட்ஸ்அப்பில் குவிந்தாலும் நீங்கள் 'Pin' செய்த 'Chat'-கள் மேலேயே இருக்கும். எனவே நீங்கள் குறித்து வைத்தவற்றை நீண்ட தூரத்திற்கு ஸ்க்ரோல் செய்து தேட வேண்டாம். முக்கியமான க்ரூப்களின் தகவல்களைத் தவறவிடவும் மாட்டோம். 

இந்த வசதி மூலம், சேட், வாக்கெடுப்புகள், படங்கள், இமோஜிகஸ் உள்ளிட்டவற்றை 24மணி நேரம், 7 நாட்கள், 30 நாட்கள் வரை Pin செய்து வைக்க முடியும்

Trending News

Latest News

You May Like