திடீரென 6,50,000 கணக்குகளை முடக்கிய வாட்ஸ் அப் நிறுவனம்..!!

நம் குடும்ப உறவுகள், நண்பர்கள், அலுவலகத்தில் பணியாற்றும் சக ஊழியர்களோடு உரையாடவும், ஃபோட்டோ, வீடியோ உள்ளிட்ட மீடியாக்களை அனுப்பி வைக்கவும், அதேபோன்று டாக்குமெண்டுகளை பகிர்ந்து கொள்ளவும் வாட்ஸ் அப் மிகவும் உதவிகரமாக இருக்கிறது.
இது தவிர்த்து, தற்போது பயனாளர்களின் நலன் கருதி பணப்பரிமாற்ற வசதியும் வாட்ஸ்அப்-பில் இடம்பிடித்துள்ளது. அந்த வகையில், ஏதேனும் ஒரு ரூபத்தில் வாட்ஸ் அப்-ஐ பயன்படுத்தாதவர்களே இருக்க முடியாது என்னும் சூழலில், மிகவும் அதிர்ச்சிகரமான செய்தி ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
கடந்த மே 1 முதல் மே 31 வரை மொத்தம் 6,508,000 வாட்ஸ்அப் கணக்குகளை வாட்ஸ்அப் தடை செய்துள்ளது..இந்தியாவில் தொடர்ந்து புகார்கள் அதிகரித்து வருவதால் 65 லட்சத்திற்கும் அதிகமான கணக்குகளை வாட்ஸ் அப் நிறுவனம் முடக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது பயனர் பாதுகாப்பு தொடர்பாக எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கை பயனாளர்கள் புகார் அடிப்படையில் எடுக்கப்பட்டது என வாட்ஸ் அப் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுமட்டும் இல்லாமல் இது போன்ற புகார்களை குறைப்பதற்கான நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருவதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் 500 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களைக் கொண்ட வாட்ஸ்அப், ஏப்ரல் மாதத்தில் 74 லட்சத்திற்கும் அதிகமான கணக்குகளை தடை செய்தது என்பது குறிப்பிடத்தக்கது