1. Home
  2. தமிழ்நாடு

வாட்ஸ்அப்-ல் அறிமுகமாகும் புது அம்சம்..! இனி போன்பே ஜிபே சேவைகளுக்கு ஆப்பு..!

1

UPI ஆனது PhonePe மற்றும் Google Pay அதிக அளவு ஆதிக்கம் செலுத்துகின்றன. இப்படிப்பட்ட நிலையில் இந்த ஆதிக்கத்தை குறைக்க வாட்ஸ் அப் தற்போது புதிய முயற்சியில் இறங்க உள்ளது. அதாவது வாட்ஸ்அப் (WhatsApp) நிறுவனம் தற்போது சர்வதேச யுபிஐ பேமண்ட்களை மேற்கொள்ளும் வசதியை இந்தியப் பயனர்களுக்கு வழங்கும் பணிகளில் ஈடுபட்டு உள்ளதாகத் தகவல் வெளிவந்துள்ளது.

யுபிஐ செட்டிங்ஸ் (UPI Settings) பக்கத்தில் இன்டர்நேஷனல் பேமண்ட்ஸ் (International Payments) எனும் ஆப்ஷனில் வழங்கப்பட உள்ளது என்பது தெரியவந்துள்ளது.
மேலும் இந்த சர்வதேச யுபிஐ பேமண்ட் வசதி தற்போது தேர்வு செய்யப்பட்ட பீட்டா பயனர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடிய விரைவில் இந்த புதிய வசதி அனைத்து பயனர்களுக்கும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல வாட்ஸ்அப் நிறுவனம் இன்னொரு புதிய அப்டேட்-ஐ கூட வெளியிட உள்ளது.அதாவது வாட்ஸ்அப் செயலியில் தற்போது ஸ்டேட்டஸ் வைக்கும் போது 30 வினாடி வீடியோவை மட்டுமே ஸ்டேட்டஸ் ஆக வைக்க வாட்ஸ்அப் நிறுவனம் அனுமதிக்கிறது. ஆனால் இந்த 30 வினாடி ஸ்டேட்டஸ் நேரம் போதாது என பல பயனர்கள் வாட்ஸ் நிறுவனத்திடம் தெரிவித்துள்ளனர். எனவே இந்த 30 வினாடி கால அவகாசத்தை இரட்டிப்பாக்க முடிவு செய்துள்ளது வாட்ஸ்அப் நிறுவனம்.

 

Trending News

Latest News

You May Like