1. Home
  2. தமிழ்நாடு

இனி வாட்ஸ் அப் போதும்.. பி.எஃப் பிரச்னை தீர்ந்துவிடும்!



பி.எஃப் தொடர்பான பிரச்னைகளுக்கு வாட்ஸ் அப் மூலமாகவே தீர்வு காணும் வசதியை வருங்கால வைப்பு நிதி அமைப்பு அறிமுகப்படுத்தியுள்ளது.

கொரோனா பொதுமுடக்கம் காரணமாக மக்களுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதால் பி.எஃப் பணத்தை உடனடியாக எடுக்க மத்திய அரசு வழிவகை செய்தது. அதன்படி ஏராளமானோர் பி.எஃப் பணத்தை எடுத்து பயன்பெற்றுள்ளனர்.

பி.எஃப் சேமிப்பு தொடர்பாக மக்களுக்கு அதிகமாக சந்தேகம் வருவது வாடிக்கைதான். மக்களின் சந்தேகங்களை தீர்க்க வருங்கால வைப்பு நிதி அமைப்பின் சார்பில் வாடிக்கையாளர் குறை தீர்ப்பு சேவைகள் மையங்கள் செயல்பட்டுவருகின்றன.

உமாங் ஆப் உள்ளிட்ட செயலிகள் மூலம் பி.எஃப் தொடர்பான சந்தேகங்களுக்கு தீர்வு காணமுடியும். ஆனால் அதுகுறித்து விழிப்புணர்வு குறைவாக உள்ளது. இந்நிலையில் பிஎஃப் தொடர்பான பிரச்னைகளுக்குத் தீர்வு காண வாட்ஸ் ஆப் சேவையை வருங்கால வைப்பு நிதி அமைப்பு கொண்டுவந்துள்ளது.

இதன் மூலம் வாடிக்கையாளர்கள் அவர்களது பகுதிகளில் உள்ள வருங்கால வைப்பு வைப்பு நிதி அலுவலகத்தை நேரடியாகத் தொடர்பு கொண்டு தங்களது சந்தேகங்களுக்கை தீர்த்துக் கொள்ள முடியும்.

வாட்ஸ் ஆப் சேவை பிஎஃப் அமைப்பின் 138 பிராந்திய அலுவலகங்களிலும் நடைமுறைக்கு வந்துள்ளது. இதன் மூலம் அந்தந்தப் பகுதிகளில் உள்ள பிஎஃப் அலுவலகத்துக்கான பிரத்யேக வாட்ஸ் ஆப் எண்ணைத் தொடர்பு கொண்டு தீர்வுபெற முடியும். வாட்ஸ் ஆப் எண் தொடர்பான விவரங்கள் பிஎஃப் வலைதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

சென்னை வடக்கு - 9345750916

சென்னை தெற்கு – 6380366729

அம்பத்தூர் - 6380131921

தாம்பரம் - 6380153667

கோவை - 9994255012

மதுரை - 9489938487

நாகர்கோவில் - 6381122366

சேலம் - 9080433650

நெல்லை - 9489987157

திருச்சி - 6380109286

வேலூர் - 7397593330

newstm.in

Trending News

Latest News

You May Like