வாட்ஸ் அப் கொண்டு வரும் புது அப்டேட்..!

வாட்ஸ்அப் செயலியின் அடுத்தகட்ட அப்டேட் குறித்த தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. இனிமேல், நீங்கள் உங்களின் சாட்டில் பழைய உரையாடலை தேடி, கஷ்டப்படவே வேண்டாம். அதனை எளிதாக தேட உதவும் புதிய தேடல் அம்சத்தை வாட்ஸ்அப் விரைவில் கொண்டுவர உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வாட்ஸ்அப் கொண்டுவர உள்ள இந்த அம்சத்தின் உதவியுடன், பயனர்கள் தங்களின் சேட்டில் தேதியை உள்ளீடு செய்து பழைய செய்திகளைத் தேட முடியும். இதற்காக சேட் பக்கத்தில் சர்ச் பாரில் காலண்டர் வசதியை வாட்ஸ்அப் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாட்ஸ்அப் செயலின் அடுத்த அப்டேட் குறித்து வெளியான சமீபத்திய தகவல்களின்படி, வாட்ஸ்அப் செயலி அதன் இணைய பயனர்களுக்கு புதிய தேடல் அம்சத்தை விரைவில் கொண்டு வரப் போகிறது என்றும், இந்த அம்சத்தின் உதவியுடன், சேட் பக்கத்தில் பழைய செய்திகளைத் தேடுவது எளிதாகிவிடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.