கடவுளுக்கு தான் தெரியும் என முதல்வர் கூறியதில் என்ன தவறு ? - அமைச்சர் விஜயபாஸ்கர் கேள்வி !

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அண்மையில் கொரோனா தொடர்பான செய்தியாளர்கள் கேள்விக்கு, கொரோனா எப்போது ஓழியும் என்பது கடவுளுக்கு தான் தெரியும் எனக் கூறினார்.
இதற்கு எதிர்க்கட்சி தலைவரான மு.க.ஸ்டாலின் கடும் எதிர்ப்பு தெரிவித்து முதல்வரை சாடியிருந்தார். இந்நிலையில், கடவுளுக்கு தான் தெரியும் என முதல்வர் கூறியதில் என்ன தவறு என அமைச்சர் விஜயபாஸ்கர் கேள்வி எழுப்பியுள்ளார்.
கொரோனா தொடர்பாக யதார்த்தமாகவே முதல்வர் கூறினார் எனவும் இதில் மு.க.ஸ்டாலினுக்கு ஏன் கோபம் எனவும் அவர் கூறினார்.
மேலும் அடிப்படை ஆதாரம் இல்லாமல் கொரோனா விவகாரத்தில் அரசு மீது புகார் கூறக்கூடாது எனவும் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
newstm.in