1. Home
  2. தமிழ்நாடு

என்னாச்சு..? திடீரென விவாகரத்தை அறிவித்த விஜய் பட நடிகை..!

1

விஜய்யின் ‘பைரவா’ படத்தில், கீர்த்தி சுரேஷின் தோழியாக நடித்தவர் தான் மலையாள நடிகையான அபர்ணா வினோத்.பின் பரத் நடித்த ‘நடுவன்’ படத்தில் நாயகியாக நடித்தார். ரினில் ராஜ் என்பவரைக் காதலித்து வந்த இவர், கடந்த 2023-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். திருமணமாகி 2 வருடம் முடிந்த நிலையில் தனது காதல் கணவரை விவாகரத்து செய்வதாக அறிவித்துள்ளார்.

இதுபற்றி தனது இன்ஸ்டாவில் குறிப்பிட்டுள்ள அவர், “நீண்ட யோசனைக்குப் பிறகு நான் என் திருமணப் பந்தத்தை முடித்துக் கொள்ளும் முடிவை எடுத்திருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

விவாகரத்து பற்றி அவர் கூறுகையில், "அன்பு நண்பர்கள் மற்றும் என்னை பின் தொடரும் பாலோவர்களே எனது வாழ்க்கையில் சில மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதனை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். ஆழ்ந்த யோசனைக்கு பிறகு எனது திருமண உறவி முடிவுக்கு கொண்டு வர முடிவு செய்துள்ளேன். இது எளிதாக எடுக்கப்பட்ட முடிவு அல்ல. நான் வளரவும், மகிழ்ச்சியாகவும் இருக்கவும் இந்த முடிவு தான் சரியானது என்று நான் நினைக்கிறேன் என்று கூறியுள்ளார். மேலும், எனது திருமண வாழ்க்கை உணர்வு நீதியாக வடிகட்டிய கடினமான வாழ்க்கையாக இருந்தது. என்னுடைய வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்பதற்காக தான் இந்த முடிவு என்று குறிப்பிட்ட அபர்ணா வினோத் கடைசியாக உங்களது அன்புக்கும், ஆதரவுக்கும் நன்றி தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் மலையாள திரையுலகில் இப்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

1

Trending News

Latest News

You May Like