1. Home
  2. தமிழ்நாடு

என்னாச்சு..? திடீரென டெல்லி புறப்பட்டு சென்ற அமைச்சர் துரைமுருகன்..!

1

வேலூரில் உள்ள அமைச்சர் துரைமுருகனின் மகனும் எம்பியுமான கதிர் ஆனந்த் இல்லத்தில் நேற்று முன் தினம் அதிகாலையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்துவதற்காக வந்தனர். ஆனால் வீட்டில் பணியாட்கள் இருவர் மட்டுமே இருந்ததால், சுமார் 7 மணி நேரமாக வீட்டு வாசலில் சோதனை செய்வதற்காக காத்திருந்தனர்.

 

பின்னர் வெளிநாட்டில் இருந்தபடி தன் வீட்டில் உறவினர் இருவர் முன்னிலையில் சோதனை நடத்த கதிர் ஆனந்த் மின்னஞ்சல் மூலமாக அனுமதி அளித்தார். இதன்பிறகு அமலாக்கத்துறை அதிகாரிகள் வீட்டில் சோதனை நடத்தினர். இதேபோல் அவருக்கு சொந்தமான மற்ற இடங்களிலும் இந்த சோதனை நடந்ததாக கூறப்பட்டது. தொடர்ந்து அதிகாரிகள் சோதனை முடிந்து சென்றனர். ஆனால் வீட்டில் இருந்து ஏதேனும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதா என்பது குறித்த தகவல்கள் இல்லை. தொடர்ந்து இன்றும் எம்பி கதிர் ஆனந்துக்கு சொந்தமான கல்லூரியில் 2 வது நாளாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இது தொடர்பாக அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களிடம் கூறுகையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் வீட்டில் இருந்து எதுவும் கைப்பற்றவில்லை என்று கூறினார்.

திமுக பொதுச்செயலாளரும், தமிழக நீர்வளத்துறை அமைச்சரின் மகன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் அமைச்சர் துரைமுருகன் இன்று இரவு திடீரென டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார். இரவு 10.10 மணியளவில் ஏர் இந்தியா விமானத்தில் டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார். எதற்காக அவர் டெல்லி சென்றுள்ளார் என்பது பற்றிய தகவல் தெரியவரவில்லை.

Trending News

Latest News

You May Like