1. Home
  2. தமிழ்நாடு

என்னாச்சு..? கேதார்நாத் சென்ற ஹெலிகாப்டர் திடீரென ரோட்டில் தரையிறக்கம்..!

1

கிரிஸ்டல் ஏவியேஷன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் திடீரென சாலையில் இறங்கியதால், சாலையில் சென்று கொண்டிருந்த கார் சேதமுற்றது. சாலையில் ஹெலிகாப்டர் தரையிறக்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே ஹெலிகாப்டர் தரையில் இறக்கப்பட்டதாகவும், பயணிகள் யாருக்கும் காயமில்லை என்றும் போலீசார் கூறினர். எனினும் ஹெலிகாப்டரில் எத்தனை பயணிகள் பயணித்தனர் என்ற விவரம் இன்னும் தெரியவரவில்லை.

உத்தரகாசியின் கங்னானி பகுதியில் கடந்த மே 8ஆம் தேதி ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் அதில் இருந்த 6 பேர் உயிரிழந்தனர். இந்த ஹெலிகாப்டர் ஏரோட்ரான்ஸ் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட்டுக்கு சொந்தமானதாகும். டேராடூனின் சஹஸ்த்ரதாரா ஹெலிபேடில் இருந்து கார்சாலி செல்லும் வழியில் இந்த ஹெலிகாப்டர் விபத்துக்கு உள்ளானது.

அடர்ந்த வனப்பகுதி பள்ளத்தாக்கில் காலை 8 மணிக்கு விபத்து நடைபெற்றது. இந்த விபத்து குறித்து விசாரணை மேற்கொண்ட உத்தரகாசி போலீசார் மும்பையை சேர்ந்த மூன்று பெண்கள், உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த ஒரு பெண், ஆந்திராவை சேர்ந்த ஒருவர் ஆகியோர் உயிரிழந்தனர். இந்த ஹெலிகாப்டரை இயக்கிய குஜராத்தை சேர்ந்த விமானி விபத்தில் உயிரிழந்தார்.

எய்ம்ஸ் மருத்துவமனையின் ரிஷிகேஷ் ஹெலி ஆம்புலன்ஸ் ஹெலிகாப்டர் கடந்த மே 17ஆம் தேதி உத்தரகாண்ட் மாநிலம் கேதார்நாத் ஹெலிபேட் அருகே பின்புற பகுதி சேதம் ஆனதால் விபத்துக்குள்ளானது. எனினும், ஹெலிகாப்டரில் பயணித்த பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக இருந்தனர். விபத்து நடப்பதற்கு முன்பே எச்சரிக்கையாக விமானி பாதுகாப்பாக தரையிறக்கியதால் விபத்து தவிர்க்கப்பட்டது.

கேதார்நாத் அருகே ஒரு மாதத்துக்குள் மூன்று ஹெலிகாப்டர் விபத்துகள் நேரிட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே கேதார்நாத் பகுதிக்கு இயக்கப்படும் ஹெலிகாப்டர்கள் தொழில்நுட்ப ரீதியான சோதனைகளுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Trending News

Latest News

You May Like