1. Home
  2. தமிழ்நாடு

என்ன ஆச்சு? இந்திய பங்குச்சந்தை அதல பாதாளத்துக்கு சென்றதால் ரூ.7 லட்சம் கோடியை இழந்த முதலீட்டாளர்கள்!

1

கடந்த 5 நாட்களாக  இந்திய பங்குச்சந்தை வீழ்ச்சி அடைந்து வருகிறது. பங்குச்சந்தையில் முதலீடு செய்தால் லாபத்தை அள்ளலாம் என நினைத்திருந்த பலரும், இப்போது நஷ்டம் வருவதற்கு முன்பு வெளியேறிவிட வேண்டுமென நினைக்க தொடங்கி விட்டனர். 

சந்தைகள் 5 நாளாக சரிவில் இருப்பதற்கு முக்கிய காரணம் மக்களவை தேர்தல்தான். ஏனெனில் தற்போது இந்தியாவில் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற்று வருகின்றன. இதில் 3 கட்ட தேர்தல்கள் முடிவடைந்துள்ளது. இந்த நிலையில் மக்களவையில் யார் முன்னிலை வகிப்பார்கள் என்ற கணிப்புகள் நிலையற்ற தன்மையாக இருப்பதால் சந்தைகள் வீழ்ச்சி அடைந்து வருகின்றன. 

பங்குச்சந்தைகள் தொடர்ந்து 5வது நாளாக சரிவில் முடிவடைந்துள்ளன. மே 9ம் தேதியான இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி தலா ஒரு சதவிகிதத்துக்கு சரிந்துள்ளது. சென்செக்ஸ் 1,130 புள்ளிகள் சரிந்து 72,334.18ஆக குறைந்தது. நிஃப்டி 370 புள்ளிகளைக் குறைத்து. இதனால் முதலீட்டாளர்கள் இன்று ஒரே நாளில் ரூ.7.3 லட்சம் கோடியை இழந்துள்ளனர். இது ஒரு பெரும் இழப்பாகப் பார்க்கப்படுகிறது. 

இனிவரும் நாட்களிலும் இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து வீழ்ச்சி அடையும் என்ற கருத்து நிலவுவதால் முதலீட்டாளர்கள் தங்கள் வசம் உள்ள பங்குகளை விற்க தொடங்கியுள்ளனர். அதாவது கிடைத்தவரை லாபம் என்ற நோக்கில் பங்குச்சந்தையிலிருந்து முதலீட்டை வெளியே எடுக்க தொடங்கியுள்ளனர். இதனாலும் சந்தை வீழ்ச்சி அடைகிறது. 

இதுமட்டும் இல்லாமல் 2023-24ம் நிதியாண்டின் ஜனவரி முதல் மார்ச் வரையான காலாண்டு முடிவுகளை பல நிறுவனங்களும் வெளியிட்டு வருகின்றன. சர்வதேச பொருளாதார சூழல் உள்ளிட்ட காரணங்களினால் சில நிறுவனங்களின் முடிவுகள் எதிர்பார்த்த அளவு இல்லை. இதன் காரணமாகவும் சந்தை இறக்கத்தில் உள்ளது. 

இதெல்லாம் ஒருபுறம் இருக்க, இந்திய பங்குச்சந்தையில் உள்நாட்டு முதலீட்டாளர்கள்,முதலீடு செய்வது போல வெளிநாட்டு முதலீட்டாளர்களும் அதிக அளவு முதலீடு செய்துள்ளனர். தற்போது உள்ள சூழல் மற்றும் பொருளாதார காரணிகள் காரணமாக அன்னிய முதலீட்டாளர்கள் தொடர்ந்து தங்களின் முதலீட்டை வெளியே எடுத்து வருகின்றன. இதனாலும் இந்திய பங்குச்சந்தை வீழ்ச்சி எதிர்த்து வருகின்றன.

Trending News

Latest News

You May Like