1. Home
  2. தமிழ்நாடு

என்னாச்சு ..? திடீரென ஆபாச படங்களை பதிவிட்ட நடிகர் ஸ்ரீ..!

Q

’வழக்கு எண் 18/9’, ’மாநகரம்’, ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’, ‘வில் அம்பு’ மற்றும் ‘இறுகப்பற்று’ உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ஸ்ரீ. இவர் நடித்த படங்கள் யாவுமே வித்தியாசமான படங்கள் என்பதால், விமர்சகர்கள் மத்தியில் இவருக்கென்று நல்ல பெயர் உண்டு.

 

ஸ்ரீயின் சமூக வலைதளத்தில் அவருடைய சமீபத்திய புகைப்படங்கள், வீடியோக்கள் பகிரத் தொடங்கினார்கள். அதில் உடல் மிகவும் இழைத்து, முடியின் கலரை முழுமையாக மாற்றி ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறியிருக்கிறார் ஸ்ரீ. எதற்காக இப்படி மாறியிருக்கிறார் என்பது இன்னும் தெரியவில்லை.

 

சமீபத்தில் எந்தவொரு படத்திற்காகவும் யாருமே இவரை அணுக முடியவில்லை என்று தமிழ் திரையுலகில் ஒரு பேச்சு நிலவியது. அதனை உண்மையாக்கும் விதமாக இவரது பதிவுகள் அமைந்திருக்கிறது.

இந்நிலையில், திடீரென தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆபாசமான புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை வெளியிட்டு, அதில் சர்ச்சைக்குரிய கருத்துக்களையும் கேப்ஷனாக எழுதி வருகிறார். இதனால், 'அவர் போதை பழக்கத்திற்கு அடிமையாகி விட்டாரா?' என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Trending News

Latest News

You May Like