1. Home
  2. தமிழ்நாடு

என்னது..! பார்ட் டைம் வேளைக்கு 2 லட்சம் சம்பளமா ?...வைரலாகும் LinkedIn பதிவு..!

1

Puch AI என்கிற நிறுவனம்தான் இப்படியொரு அறிவிப்பினை வெளியிட்டிருக்கிறது. இதன் இணை நிறுவனர் சித்தார்த் பாட்டியா என்பவர் LinkedIn தளத்தில் வெளியிட்டிருக்கும் பதிவுதான், ஊரே இது குறித்து பேசுவதற்கு காரணமாக மாறியிருக்கிறது. 

தனது ஸ்டார்ட் அப் AI-க்கு 2 பயிற்சி வேலை செய்பவர்கள் (Interns) தேவை என்று அந்த பதிவில் அவர் குறிப்பிட்டிருந்தார். ஒருவர் AI Engineer ஆக வேலை பார்க்க வேண்டும் என்றும், இன்னொருவர் நிறுவனத்தின் வளர்ச்சியை பார்த்துக்கொள்ளும் Growth Magician ஆக இருக்க வேண்டும் என்றும் கூறினார். இதில் முன்னர் கூறிய இன்ஜினியருக்கு முழு நேர இண்டர்ன்ஷிப், இரண்டாமவருக்கு பகுதி நேர அல்லது முழு நேர இண்டர்ன்ஷிப்  என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒரு நிறுவனத்தில், வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்திற்கு Salary அதாவது சம்பளம் என்று பெயர். ஆனால், பயிற்சி வேலைக்கு வருபவர்களுக்கு, கற்றல் முறையும் இருக்கும், அவர்கள் பார்க்கும் வேலைக்கான ஊதியமும் இருக்கும். இதற்கு ஆங்கிலத்தில் Stipend என்று பெயர். அப்படி, இந்த நிறுவனத்தில் இண்டர்ன்ஷிப் வந்தால், அவர்களுக்கு மாதம் ரூ.1 முதல் 2 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படும் என்று அவரது பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வேலை, Remote என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, நாம் இருக்கும் இடத்தில் இருந்தே வேலை பார்க்கலாம். இதற்கு பட்டப்படிப்பு தேவை இல்லையாம். கடந்த மாதம் பள்ளியில் படிக்கும் ஒருவரை எடுத்ததாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இவர்கள் இந்த பதிவை வெளியிட்டதில் இருந்து ஊரே இவர்களை பற்றிதான் பேசி வருகிறது.

Trending News

Latest News

You May Like