இது என்ன புதுசா..! வாய்துடுக்காக பேசிவிட்டு மன்னிப்பு கேட்பது பாஜகவினரின் வழக்கம் தானே - சிபிஎம் மாநில செயலாளர்..!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "கார்ஸ் மார்க்ஸ் நினைவு நாள் நாளை (மார்ச் 14) கொண்டாடப்படுகிறது.
உலகின் பல்வேறு நாடுகளில் மார்க்ஸிய தத்துவம் கோலோற்றி வருகிறது. கார்ல் மார்க்ஸ் நினைவு தினத்தை முன்னிட்டு, மரம் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நந்தனம் அரசு கல்லூரி சிறந்து விளங்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி உதவி புரியும். உலகம் முழுவதும் வெப்பமயமாதல், பருவமழை மாற்றம் இருக்கும் நிலையில் இதுபோல மரம் நடுவது அதை தடுக்கும்.
தமிழ்நாடு அரசுக்கு எனது வேண்டுகோள் என்னவென்றால், இறந்து 140 ஆண்டுகள் ஆன கார்ல் மார்க்ஸுக்கு சென்னையில் சிலை இல்லை. அவரது முழு உருவ சிலை அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும்
மாநில அரசாங்கத்திற்கு கொடுக்க வேண்டிய நிதியை, மத்திய அரசு தான் கொடுக்க வேண்டும். இந்த பிரச்சனையை அரசியலாக்குவது பாஜக தான். வழக்கமாக பாஜக வாய்துடுக்காக பேசிவிட்டு பின் மன்னிப்பு கேட்பது வழக்கமான ஒன்று தான். தர்மேந்திர பிரதான் அப்படி தான் பேசி உள்ளார். பெரியார் காட்டுமிராண்டி மொழி என சொன்னது மொழி காட்டுமிராண்டி என்பதற்காக அல்ல, பெற்றோர்கள் பிள்ளைகளை கண்டிக்க வேண்டும் தெருவில் போகும் நாய் பேய் எல்லாம் கண்டிக்க முடியாது.
2021 சட்டமன்றத் தேர்தலில் பல்வேறு வாக்குறுதிகளை கொடுத்துள்ளார்கள். அதில் பல இன்னும் நிறைவேறாமல் உள்ளன. நாளை கடைசி பட்ஜெட், அதில் ஆளும்கட்சியின் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். கடுமையான நிதி நெடுக்கடியில் தமிழ்நாடு இருப்பதை உணர வேண்டும், மத்திய அரசிடம் இருந்து நிதியை கேட்டு பெறுவதும், தமிழ்நாடே நிதியை உருவாக்குவதும் என்ற அதற்கேற்ற வகையில் நிதிநிலை அறிக்கை அமைய வேண்டும். " என்று சண்முகம் கூறினார்.
ஒன்றிய அரசிடம் கேரள மாநில ஆளுநரும், முதலமைச்சரும் நிதியை கேட்டது எப்படி பார்க்கிறீர்கள் என்ற செய்தியாளர் கேள்விக்கு, “தமிழ்நாட்டில் போட்டி அரசாங்கத்தை மாநில ஆளுநர் நடத்தி வருகிறார். கேரளாவின் ஆளுநர் மாநில அரசுக்கு ஒத்துழைத்து, முதலமைச்சரும் மத்திய அமைச்சரை சந்தித்து இருப்பது வரவேற்கத்தக்கது. மத்திய அரசின் பிரதிநிதியாக இருக்கும் ஆளுநருக்கு மாநில அரசுடன் ஒத்துழைத்து இருப்பது ஒரு நல்ல உதாரணத்தை ஏற்படுத்தி உள்ளது” என்று அவர் கூறினார்.