1. Home
  2. தமிழ்நாடு

இன்று முழு ஊரடங்கில் எதெல்லாம் இயங்கும்…எதெல்லாம் இயங்காது..?

இன்று முழு ஊரடங்கில் எதெல்லாம் இயங்கும்…எதெல்லாம் இயங்காது..?


தமிழகத்தில் ஏற்கனவே அறிவித்தபடி இன்று முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது.இந்நிலையில் முழு ஊரடங்கில் எதெல்லாம் இயங்கும் ,இயங்காது என பின்வருமாறு தெரிந்து கொள்ளுங்கள்.

  • முழு நேர ஊரடங்கின்போது பெட்ரோல், டீசல் பங்குகள் 24 மணி நேரமும் செயல்பட அனுமதி உண்டு. பெட்ரோல் நிலைய ஊழியர்கள் கொரோனா நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.
  • முழு ஊரடங்கில் உணவகங்களில் பார்சல் சேவை மட்டும் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை அனுமதி.
  • இரவு ஊரடங்கின் போது மற்றும் முழு ஊரடங்கின்போது விமானம், ரயில் மற்றும் பேருந்துகளில் பயணிப்பதற்காக செல்லும் மக்கள் சொந்த மற்றும் வாடகை வாகனங்களை பயன்படுத்தி கொள்ள அனுமதிக்கப்படும். அவ்வாறு பயணிக்கும்போது, பயணச்சீட்டு வைத்து கொள்ள வேண்டும்.
  • முழுநேர ஊரடங்கின்போது உற்பத்தி சாலைகள், ஐடி நிறுவனங்கள் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளன. ஆனால் அதேநேரத்தில் அந்நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் அடையாள அட்டையுடன் வெளியே வரவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
  • அத்தியாவசிய பணிகளான பால் விநியோகம், தினசரி பத்திரிகை விநியோகம், மருத்துவமனைகள், மருத்துவ பரிசோதனைக் கூடங்கள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் சேவைகள் போன்ற மருத்துவத்துறை சார்ந்த பணிகள், ஏ.டி.எம் மையங்கள், சரக்கு வாகனங்கள் இரவு நேரத்திலும் அனுமதிக்கப்படும்.
  • திருமண விழாவிற்கு செல்ல அனுமதி வழங்கி தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. திருமண அழைப்பிதழை காண்பித்து பயணங்களை மேற்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. திருமண மண்டபத்தில் 100 நபர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

எதற்கெல்லாம் தடை ..?

  • அனைத்து வழிபாட்டு தலங்களிலும் வெள்ளி, சனி, ஞாயிறு நாட்களில் பொது மக்களுக்கு அனுமதி இல்லை
  • சமுதாய, கலாசார மற்றும் அரசியல் கூட்டங்கள் போன்ற பொது மக்கள் கூடும் நிகழ்ச்சிகளுக்கு தற்போது நடைமுறையில் உள்ள தடை தொடரும்
  • மீன் மற்றும் இறைச்சி கூடங்கள் விற்க அனுமதி தடை .
  • பொது போக்குவரத்திற்கு தடை .

Trending News

Latest News

You May Like