1. Home
  2. தமிழ்நாடு

2024 ஆம் ஆண்டில் என்னவெல்லாம் நடக்கும் : பாபா வங்கா கணிப்பு ..!

1

 2024ம் ஆண்டு பாபா வங்காவின் கணிப்புகள் :

பாபா வெங்காவின் கணிப்பின்படி, 2024 ஆம் ஆண்டில் உலகளாவிய பெரிய நெருக்கடி நிலை ஏற்படலாம். மக்களிடமும், நாடுகளிடமும் கடன் அளவு அதிகரிக்கும். நாடுகளுக்கிடையே நிலம் தொடர்பான பதற்றமான சூழல் இருக்கலாம். இது உலகப் பொருளாதாரத்திற்குச் சவால் விடக்கூடியதாக இருக்கும் என கூறியுள்ளார்.

பாபா வங்காவின் கணிப்பின்படி 2024ம் ஆண்டில் பயங்கரமான வானிலை நிகழ்வுகள் மற்றும் இயற்கை பேரழிவுகள் இருக்கும் என்றும் அவர் முன்னறிவித்துள்ளார். பூமியின் சுற்றுப்பாதையில் சிறிது மாற்றம் வரலாம். இது மிக மிக மெதுவாக நீண்ட காலத்திற்கு நடக்கும். ஆனால், இந்த மாற்றத்தில் வேகம் அதிகரித்தால் பயங்கர இயற்கை பேரிடர் ஏற்படும்.

பாபா வங்காவின் கூற்றுப்படி, 2024 ஆம் ஆண்டிலும் அதிக சைபர் தாக்குதல் நிகழலாம். ஹேக்கர்களின் பலம் அதிகரிக்கும். இவர்கள் மின் உற்பத்தி ஆதாரங்களையும் மற்றும் நீர் சுத்திகரிப்பு நிலையங்களைத் தாக்கலாம். இதனால் தேசிய பாதுகாப்புக்கு மிகப் பெரிய அச்சுறுத்தல் ஏற்படும்.

 2024 ஆம் ஆண்டில் மருத்துவத் துறையில் மிகப்பெரிய நல்ல விஷயங்களும், புதிய கண்டுபிடிப்புகளும் சாத்தியமாகும். குறிப்பாக புற்றுநோய் மற்றும் அல்சைமர் போன்ற நோய்களுக்கு புதிய சிகிச்சைகள் கண்டுபிடிக்க வாய்ப்புள்ளது.

பாபா வங்காவின் கூற்றுப்படி, 2024 ஆம் ஆண்டு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. அவர்களின் சொந்த நாட்டைச் சேர்ந்த ஒருவர் அவர்களைத் தாக்கலாம்.

Trending News

Latest News

You May Like