விமான விபத்துக்கு முன் விமானி கடைசியாக பேசியது என்ன?

ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட விமானம் சரியாக 5 நிமிடத்தில் மேல் எழும்ப முடியாமல் கீழே விழுந்தது. மேலும் அந்தப் பகுதியில் உள்ள மருத்துவ கல்லூரி மாணவ விடுதி மேற்கூரை மீது விமானம் விழுந்து தீப்பிடித்து எரிந்தது.
இந்த விபத்தில் விமானத்தில் இருந்த 241 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பிரிட்டனைச் சேர்ந்த ஒரே ஒருவர் மட்டும் பலத்த காயங்களுடன் உயர் தப்பினார். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். விமானத்தில் இருந்த இரண்டு விமானிகள் மற்றும் 9 விமான பணியாளர்களும் இந்த சம்பவத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர்.
விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விமானி அகமதாபாத் விமான நிலைய கட்டுப்பாட்டு அறையைத் தொடர்பு கொண்டு, "விமானத்தால் மேலே எழும்ப முடியவில்லை. விமானம் கீழே விழுகிறது. மே டே (Mayday)" என்று அபய குரல் எழுப்பியதாக தகவல் வெளியாகி உள்ளது.
Mayday என்ற சொல் பொதுவாக விமானம் அல்லது கப்பல்களில் ஆபத்து நேரத்தில் பயன்படுத்தப்படுவதாகும். அப்படி என்றால் பிரெஞ்சு மொழியில் உதவி தேவை என்று அர்த்தம். முதன் முதலாக Mayday என்று சொல்லை ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஒருவர் கடந்த 1950-களில் பயன்படுத்த தொடங்கினார். அதன் பின்னர் அந்த சொல்லாடல் பரவலாக உலகம் முழுவதும் வியாபிக்க தொடங்கியது.
10 நாட்கள் வரை ஆகலாம்
இந்த நிலையில் ஏர் இந்திய விமானம் விபத்துக்குள்ளான சில நிமிடங்களுக்கு முன்பாக விமானி, இந்த சொல்லை கட்டுப்பாட்டு அறைக்கு தெரியப்படுத்தி இருப்பது தற்போது வெளியாகி உள்ளது. பொதுவாக கருப்பு பெட்டியில் பதிவான விவரங்களை முழுமையாக அறிந்து கொள்ள 10 நாட்கள் வரை தேவைப்படும். அந்த வகையில் வரும் நாட்களில் ஏர் இந்தியா விமான விபத்து தொடர்பாக கூடுதல் தகவல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.