1. Home
  2. தமிழ்நாடு

நடிகையின் காரில் என்ன தான் இருந்தது? வெளியான ரகசியம்!

1

 ஒரு நாள் கூத்து என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை நிவேதா பெத்துராஜ்.தொடர்ந்து ஜெயம் ரவியுடன் டிக் டிக் டிக் மற்றும் நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனியின் திமிரு புடிச்சவன் ஆகிய படங்களில் நடித்தார்.

இறுதியாக இவரது நடிப்பில் பொன் மாணிக்கவேல் என்ற திரைப்படம் வெளியானது. இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு நிவேதா பெத்துராஜ் காரில் பயணித்துள்ளார்.

அப்போது அவரை மடக்கிய போலீசார், அவரது காரை சோதனையிட கேட்டனர். ஆனால், அதற்கு நிவேதா பெத்துராஜ் மறுத்து பேசினார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும், போலீசாரை சோதனை மேற்கொள்ள வேண்டாம் என கூறும் அளவிற்கு நிவேதா பெத்துராஜின் காரில் என்னதான் இருந்தது என்ற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்தது.

இந்த நிலையில், பிரபல ஓடிடி தனமான ஜி5 (ZEE5 Telugu) இதற்கு விளக்கம் அளித்துள்ளது. இதன்படி, பருவு என்ற இணைய தொடருக்காகவே (Paruvu web series) இந்த காட்சி படமாக்கப்பட்டதாக கூறியுள்ளது. எனவே, இது நிஜமல்ல, ஒரு திரைப்படத்தின் காட்சி என்பது உறுதியாகி உள்ளது.


 

Trending News

Latest News

You May Like