விஜய் கூறியது கொள்கையல்ல...கூமுட்டை! அதுவும் அழுகிய கூமுட்டை - சீமான்..!
சென்னையில் நாம் தமிழர் கட்சி சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு நாள் பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அக்கட்சியின் தலைவர் சீமான், “திராவிடமும், தமிழ் தேசியமும் ஒன்றா ப்ரோ... அடிப்படையே தவறு. விஜய் கூறுவது கொள்கையல்ல, கூமுட்டை! சாலையில் ஒன்று அந்த பக்கம் நில், அல்லது இந்த பக்கம் நில்.. இப்படி நடுரோட்டில் நின்றால் லாரி வந்து அடித்துவிடுவான். இது நடுநிலை இல்லை மிக கொடுநிலை. ஒன்று சாம்பார் என்று சொல்லு, இல்ல கருவாடு என்று சொல்லு அதென்ன கருவாட்டு சாம்பார்? இந்த ஆட்டம் பூச்சாண்டி எல்லாம் என்கிட்ட காட்டாத, 2026ல் என் ஆட்டத்தை யாராலும் சமாளிக்க முடியாது. எங்கள் லட்சியத்திற்கு எதிராக பெற்ற தகப்பனே வந்தாலும் எதிரி எதிரி தான் அதில் தம்பியும் கிடையாது, அண்ணனும் கிடையாது. தம்பி நான் குட்டி கதை சொல்பவன் அல்ல; வரலாற்றை கற்பிக்க வந்தவன். நீங்கள் இனிமேல் பெரியார், அம்பேத்கரை படிக்க வேண்டும். நாங்கள் அதைப் படித்து பிஎச்டி வாங்கிவிட்டோம். நீங்கள் இனிமேல் தான் சங்க இலக்கியத்தில் எங்கு இலக்கியம் உள்ளது என்று தேட வேண்டும்.
பேரறிஞர் அண்ணா தமிழ்நாடு என்ற பெயரை புதிதாக வைக்கவில்லை. ஏற்கனவே இருந்தது, மறைக்கப்பட்டிருந்தது அதை நாம் திருப்பி வைத்துள்ளோம். இவர்கள் தமிழர்களுக்கு எந்த அடையாளமும் வரலாறும் இருக்கக்கூடாது என்று திட்டமிட்டு செயல்படுகிறார்கள். மொழிவழி மாநிலங்கள் பிறந்த நாளை மற்ற மாநிலங்கள் அரசு விழாவாக கொண்டாடுகிறது ஆனால் தமிழ்நாடு அரசு கொண்டாடவில்லை. எல்லா கட்சியியினரும் அந்தந்த மாநிலங்களில் கொண்டாடுகிறார்கள். ஆனால் தமிழ்நாட்டில் இவர்கள் எவரும் வாயை திறக்கவில்லை” என்றார்.
🔹விஜய் கூறியது கொள்கையல்ல, கூமுட்டை! அதுவும் அழுகிய கூமுட்டை!!
— Spark Media (@SparkMedia_TN) November 1, 2024
🔹ஒன்னு சாலையின் அந்த ஓரத்தில் நில்லு, இல்லை இந்த ஓரத்தில் நில்லு, நடுவுல நின்னா லாரி அடிச்சு செத்துப்போயிடுவ
-நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் பேச்சு#Seeman #NTK #TVKVijayMaanaadu #Vijay #SparkMedia pic.twitter.com/llVttxaZGL